மீண்டும் ஒரு வெற்றி..!! “விண்ணில் பாய்ந்த எஸ்.எஸ்.எல்.வி டி-3 ராக்கெட்..”
பூமியைக் கண்காணிப்பதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO) 175.5 கிலோ எடை மற்றும் 420 வாட்ஸ் ஆற்றலை உருவாக்கும் திறன் கொண்ட “இ.ஒ.எஸ்-08” எனும் செயற்கைக்கோளை வடிவமைத்துள்ளது. இந்த செயற்கைக்கோளானது சிறியரக “எஸ்.எஸ்.எல்.வி டி-3 ராக்கெட்” ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இருந்து இன்று காலை 9:17 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது
மூன்று நிலைகளை கொண்டுள்ள இந்த ராக்கெட்டில் திட வகையிலான எரிபொருள்கள் பயன் படுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த இ.ஓ.எஸ்-08 செயற்கை கோளில் எலக்ட்ரோ ஆப்டிகல் இன்ஃப்ராரெட் பேலோட் (EOIR), குளோபல் நேவிகேஷன் சாட்டிலைட் சிஸ்டம்-ரிஃப்ளெக்டோமெட்ரி பேலோட் (GNSS-R) மற்றும் எஸ்.ஐ.சி யுவி டோசிமீட்டர் (SiC UV Dosimeter) உள்ளிட்ட கருவிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும், இந்த கருவிகளின் செயல்காலம் ஒரு ஆண்டு வரை மட்டுமே செயல்படும்.
மேலும் இந்த செயற்கை கோள்கால் பூமியை 24 மணி நேரமும் கண்காணித்து, பேரிடர் கண்காணிப்பு, சுற்றுச்சூழல் கண்காணிப்பு, தீ விபத்து உள்ளிட்ட பயன்பாடுகளுக்கு உபயோகிக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என ஆய்வு நிர்வானம் தெரிவித்துள்ளது.. எரிபொருள் நிரப்பும் பணி முடிவடைந்த பின்னரே ராக்கெட் ஏவுதலுக்கான 6:30:00 மணி நேர கவுண்டவுன் இன்று அதிகாலை 2:47 மணிக்கு தொடங்கப்பட்டது..
எஸ்.எஸ்.எல்.வி டி-3 திட்டமிட்ட படியே குறிப்பிட்ட நேரத்தில் பூமியில் இருந்து விண்ணுக்கு பாய்ந்தது.. சரியாக 13 நிமிடத்தில், 475 கிலோ மீட்டர் உயரத்தில் குறைந்த புவி வட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இஸ்ரோ தனது எக்ஸ் வலைத்தளம் பக்கத்தில் பதிவிட்டுள்ளது..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..