நீட் தேர்வுக்கு எதிராக…10 லட்சம் பேர்..? உதயநிதி வெளியிட்ட பகீர் தகவல்..?
இதுவரை 10 லட்சம் பேர் நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்திட்டிருப்பதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
நீட் விலக்கு கையெழுத்து இயக்கம் குறித்து வி.சி.க. தலைவர் திருமாவளவனுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து பேசியுள்ளார்.,
அதில் கலந்து கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவனவன் நீட் தேர்வு விலக்கு கடிதத்தில் கையெழுத்திட்டார்.
நீட் தேர்வு விலக்குக்கு ஆதாரவாக 10 லட்சம் பேர் கையெழுத்திட்டுள்ளனர்.., அனைத்து இயக்கத்தினரையும் சந்திக்க நான் தயாராக இருக்கிறேன் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
50 லட்சம் கையெழுத்து பிரதிகளை குடியரசுத் தலைவரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடுப்பார்..,
இதுவரை 10 லட்சம் பேர் கையெழுத்திட்டு இருக்கும் நிலையில்.., இன்னும் 50 லட்சம் பேரிடமும் கையெழுத்து வாங்கி குடியரசு தலைவரிடம் ஒப்படைப்போம் என அவர் கூறினார்.
நீட் தேர்வால் இன்னொரு உயிரிழப்பு நடக்கக் கூடாது என்பதே எங்கள் நோக்கம் என்று அமைச்சர் உதயநிதி குறிப்பிட்டார்.
சனாதனத்தை எந்தக் காலத்திலும் எதிர்ப்போம் என செய்தியாளர்கள் முன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டியளித்தார்.
சனாதனம் பல நூற்றாண்டு கால பிரச்சனை இது தொடர்பான வழக்கை சட்டப்படி சந்திப்போம் எனவும் அவர் கூறினார்.
Discussion about this post