அபாயகட்டத்தில் டெல்லி..!! 50% நபர்களுக்கு வேலையில்லை..! மூடப்பட்ட பள்ளி கல்லூரிகள்..!!
டெல்லியில் அதிகரித்து வரும் மாசு கட்டுப்பாட்டின் அளவைக் கருத்தில் கொண்டு, டெல்லியில் உள்ள என்சிஆரில் அரசு, மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் 50 சதவீதம் பேருக்கு வீட்டில் இருந்து வேலை செய்யும்படி உத்தரவிட்டுள்ளது.
அதோடு, டெல்லிக்குள் கனரக வாகனங்கள் மற்றும் லாரிகள் நுழைய, கட்டுமானத் திட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.., தேசிய தலைநகரில் உள்ள அனைத்து தொடக்கப் பள்ளிகளுக்கும் நவம்பர் 10 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கபட்டுள்ளது..
டெல்லி என்சிஆர் மண்டலத்தில் காற்றின் தரம் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதால் விடுமுறை நாளான நேற்று மாசு காற்றின் தரக்குறியீட்டின் அளவு 400க்கும் மேல் அதிகரித்துள்ளது…
இந்த நிலையை எட்டும்போது கெட்ட மாசு காற்றை மக்கள் சுவாதித்தால் சுவாசப்பிரச்னைகள், ஆஸ்துமா உடல் உபாதைகள் போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும். எனவே காற்றின் தரத்தை உயர்த்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன..
புழுதி மாசுகளை கட்டுபடுத்த மரங்கள், சாலைகளில் தண்ணீர் தெளித்தல், கட்டுமானப்பணிகளுக்கு கட்டுப்பாடு, ஓட்டல்களில் நிலக்கரி பயன்பாடு, டீசல் ஜெனரேட்டர்கள் பயன்படுத்த தடை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை மாநில அரசு அமலுக்கு கொண்டு வந்துள்ளது.
இதைதவிர, போக்குவரத்து சிக்னல்களில் சிகப்பு விளக்குகள் எரியத் தொடங்கிய உடன் சிக்னலில் காத்திருக்கும் வாகனங்கள் பச்சை விளக்கு ஆன் ஆகும் வரை வாகனங்களின் இன்ஜின்களை ஆப் செய்து வைக்க வேண்டும்..,
கிரேடடு ரெ1் பான்ஸ் செயல்திட்ட பரிந்துரைகள் என பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள போது காற்றின் தரம் தொடர்ந்து மோசமான நிலையில் செயல்பட்டு வருகிறது..
இந்த நிலையை மாற்ற மாசுபாட்டை கட்டுப்படுத்த ஒன்றிய மற்றும் என்சிஆர் மண்டல அரசுகள் இதுவரை எடுத்த நடவடிக்கைகள் என்வென்பது பற்றிய அறிக்கையை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக, காற்றுமாசுபாட்டை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்து அமலுக்கு கொண்டு வந்து காற்றின் தரத்தை மேம்படுத்த தேவையான உத்திகளை வகுத்து செயல்படுத்த காற்றுத் தர மேலாண்மை ஆணையம், உத்தரவிட்டுள்ளது…
இதனையேற்ற ஆம் ஆத்மி மற்றும் ஒன்றிய அரசு அடுத்த கட்டமாக மேலும் சில நடவடிக்கைகளை எடுக்க போவதாகவும் தெரிவித்துள்ளனர்..
* காற்றின் தரத்தை உயிர்த்த.., அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு காற்றுத்தர மேலாண்மை ஆணையம் டெல்லி என்சிஆர் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இதனால் வாகனங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post