மீண்டும் மணிப்பூரில் இன்று முதல் சேவை தொடக்கம்..?
மணிப்பூரில் நிறுத்திவைக்கப்பட்ட மொபைல் இணையச் சேவை இன்று முதல் மீண்டும் தொடங்கப்படும் என மணிப்பூர் முதல்வர் என்.பைரன் சிங் தெரிவித்துள்ளார்.
மணிப்பூர் மாநில முதல்வர் என்.பைரன் சிங் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்று முதல் அடுத்த 15 நாட்களுக்குள் பொதுமக்கள் தங்களிடம் வைத்து இருக்கும் ஆயுதங்களை அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், ஆயுதங்களை மத்திய , மாநில பாதுகாப்பு படை வீரர்கள் கடுமையான நடவடிக்கை மேற்கொண்டு பறிமுதல் செய்வார்கள் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதனை அடுத்து, இன்று முதல் மணிப்பூர் மாநிலத்தில் விதிக்கப்பட்டு இருந்த இணையதள சேவை தடை நீக்கப்பட்டது. ஏற்கனவே பல்வேறு பகுதிகளில் அலுவலக உபயோகத்திற்காக மட்டும் பிராட்பேண்ட் சேவைகள் செயல்பாட்டில் இருந்து வந்த நிலையில் இன்று முதல் அனைத்து வகையான இன்டர்நெட் சேவையும் செயல்பட தொடங்கியுள்ளது..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..