அட்டகாசமான ரைஸ் பகோடா…! ட்ரைப் பண்ணுங்க…!
சாதம்-2கப்.
வெங்காயம்-1
பச்சை மிளகாய்-2
கருவேப்பிலை- சிறிதளவு.
கொத்தமல்லி-சிறிதளவு.
மஞ்சள் தூள்-1/4 தேக்கரண்டி.
கரம் மசாலா-1/2 தேக்கரண்டி.
ஜீரகத்தூள்-1/2 தேக்கரண்டி.
பெருங்காயத்தூள்-1/4 தேக்கரண்டி.
கடலை மாவு-1/2 கப்.
அரிசி மாவு-1/4 கப்.
எண்ணெய்- தேவையான அளவு.
ஒரு பாத்திரத்தில் சாதம் போட்டு அத்துடன் பச்சை மிளகாய், இஞ்சி, கருவேப்பிலை, கொத்தமல்லி, மஞ்சள்தூள்,மிளகாய்த்தூள்,கரம் மசாலா, ஜீரகத்தூள்,பெருங்காயத்தூள்,உப்பு, கடலை மாவு மற்றும் அரிசி மாவை சேர்த்து ஒன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும்.
கையில் எண்ணெய் தடவி சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
ஒரு வாணலை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் உருண்டைகளை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
அவ்வளவு தான் சுவையான ரைஸ் பகோடா தயார்.