சுவையான நல்லி நிஹாரி செய்யலாமா..குக் வித் கோமாளி பிரியங்கா ஸ்பெஷல்..!
தேவையான பொருட்கள்:
நல்லி எலும்பு – 1/2 கிலோ
வறுத்த வெங்காயம் – 1 கப்
கோதுமை மாவு – 2 மேசைக்கரண்டி
இஞ்சி
நெய் – 2 மேசைக்கரண்டி
தண்ணீர்
உப்பு
நிஹாரி மசாலா தூள் செய்ய:
சீரகம் – 2 தேக்கரண்டி
சோம்பு – 1 தேக்கரண்டி
பிரியாணி இலை
மிளகு – 1 தேக்கரண்டி
இலவங்கப்பட்டை
ஜாதிக்காய்
அன்னாசி பூ
கிராம்பு
கருப்பு ஏலக்காய் – 2
பச்சை ஏலக்காய் – 4
வறுத்த பொட்டுக்கடலை – 1 1/2 தேக்கரண்டி
கச கசா – 1 தேக்கரண்டி
காஷ்மீரி சிவப்பு மிளகாய் – 5
இஞ்சி தூள் – 1 தேக்கரண்டி
செய்முறை:
ஒரு குக்கரில் சதையுடன் கூடிய நல்லி எலும்புகளை போட்டு தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து விசில் வைக்காமல் அரை மணி நேரத்திற்கு வேகவைக்க வேண்டும்.
அரை மணி நேரம் ஆனதும் விசில் வைத்து சுமார் ஆறு விசில் வரும்வரை விட்டு இறக்கவும்.
பின் அடுத்ததாக மசாலாத்தூள் அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை எல்லாம் ஒரு வாணலில் சேர்த்து மிதமான தீயில் லேசாக வறுத்துக் பின் ஆறவைத்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெய் சேர்த்து பின் அதில் வேகவைத்த நல்லியை நீருடன் சேர்த்து,வறுத்த வெங்காயத்தையும் சேர்த்து அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து கலந்து கொதிக்க விடவும்.
நன்றாக கொதித்ததும் கோதுமை மாவி சிறிது நீரில் கரைத்து இதில் சேர்க்கவும்.
இக்கலவை கெட்டியானதும் கடைசியில் கொத்தமல்லி இலைகளை சேர்த்து கலந்துக் கொள்ளவும்.
அவ்வளவுதான் சுவையான நல்லி நிஹாரி தயார்.