விருதுநகர் பட்டாசு ஆலையில் விபத்து..!! உடனடியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்த செயல்..!!
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் ரெங்கபாளையத்தில் உள்ள பட்டாசு ஆலையில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். சம்பவ இடத்திலேயே 5 பேர் உயிரிழந்த நிலையில், காயமடைந்த மூன்று பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
அதேபோல், விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே போடு ரெட்டியபட்டியில் உள்ள தனியார் பட்டாசு ஆலையிலும் இன்று நண்பகல் விபத்து ஏற்பட்டது.
இதில் சிக்கி தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். பட்டாசு தயாரிக்கும்போது உராய்வு ஏற்பட்டு இந்த விபத்து ஏற்பட்டதாக காவல்துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சிவகாசி வட்டாரத்தில் இன்று இருவேறு இடங்களில் நடந்த பட்டாசு வெடி விபத்தில் 14 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், விபத்தில் படுகாயமடைந்து ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும், ஆறுதல் தெரிவித்துள்ள முதலமைச்சர், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாயும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், வழங்க உத்தரவிட்டுள்ளார்.