அடுத்த வெற்றிக்கு அடியெடுத்து வைத்த ஆதித்யா எல்-1..!! இஸ்ரோவின் அடுத்த அப்டேட்..!!
சூரியனை கண்காணிக்க இந்தியாவின் சார்பில் ஆதித்யா எல்-1 முதன் முதலாக அனுப்பப்பட உள்ளது. சூரியனின் காந்தப்புயல்களை முன் கூட்டையே கணிக்கவும், சூரியனின் பல்வேறு அடுக்குகளை ஆய்வு செய்யவதற்காகவும் ஆதித்யா எல்-1 செல்ல உள்ளது.
பூமியில் இருந்து சுமார் 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் லெக்ராஞ்சியன் பாயிண்ட் ஒன் எனும் இடத்தில் இது நிலைநிறுத்தப் பட்டுள்ளது. இந்த ஆதித்யா எல்- 1 விண்கலம், பி.எஸ்.எல்.வி.சி- 57 ராக்கெட் மூலம் செப்டம்பர் 2ம் தேதி காலை 11.50 மணிக்கு விண்ணிற்கு அனுப்பப்பட்டது.
அதற்கான ஆதித்யா எல்- 1 விண்கலம், 24 மணி நேர கவுன்ட்டவுன், ஆகஸ்ட் 31ம் தேதி காலை 11:50 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து ராக்கெட் சென்றது
சூரியனை ஆய்வு செய்யவதற்காக ஏவப்பட்டுள்ள ஆதித்யா எல் 1 விண்கலம் தற்போது விண்கலத்தின் சுற்றுவட்ட பாதையின் உயரம் அதிகரிக்கப்பட்டுள்ளது என இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.
சுற்றுவட்டப்பாதை உயரம் உயர்த்தப்பட்ட பிறகு பூமியில் இருந்து விண்கலம் தற்போது 245 கி.மீ.x22, 459 கி.மீ. தொலைவில், ஆதித்யா எல் 1 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதையின் உயரம் நாளை மறுநாள் மீண்டும் உயர்த்தப்பட இருப்பதாகவும், இஸ்ரோ கூறியுள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..