டார்லிங், சார்லி சாப்ளின் படங்களில் நடித்த நிக்கி கல்ராணியை ஈரம் படம் அறிமுகமான நடிகர் ஆதி திருமணம் செய்ய இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் ஜிவிபிரகாஷிற்கு ஜோடியாக டார்லிங் படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை நிக்கி கல்ராணி. இதனை தொடர்ந்து யாகாவாராயினும் நாகாக்க, கோ 2, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கடவுள் இருக்கான் குமாரு, மொட்டசிவா கெட்டசிவா, மரகத நாணயம், ராஜவம்சம் உள்ளிட்ட பல படங்களில் நிக்கி நடித்துள்ளார்.
இதையடுத்து, மிர்ச்சி சிவாவுடன் இணைந்து இடியட் படத்தில் நடித்திருக்கிறார். அந்தப் படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. அத்துடன் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் பிஸியாக நடித்து வருக்கிறார்.
முன்னதாக, யாகாவாராயினும் நாகாக்க, மரகத நாணயம் உள்ளிட்ட படங்களில் நிக்கி கல்ராணி ஆதிக்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
கடந்த சில ஆண்டுகளாக நிக்கிகல் ராணியும், நடிகர் ஆதியும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் வந்த நிலையில், அவர்கள் இருவரும் இந்த ஆண்டு திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், நடிகை நிக்கி கல்ராணி தனது நிச்சயதாரர்த்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். அந்த பதிவில், “வாழ்க்கையில் ஒருவரையொருவர் பிடித்துக் கொள்வதுதான் சிறந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் ஒருவரையொருவர் கண்டுகொண்டோம் 24.3.22 எங்களுக்கு சிறப்பான நாள்.
எங்கள் இரு வீட்டாரும் முன்னிலையில் நிச்சயதார்த்தம் செய்து கொண்டோம்..இந்த புதிய பயணத்தை நாங்கள் ஒன்றாக மேற்கொள்ளும்போது உங்கள் அன்பு மற்றும் ஆசீர்வாதங்களைத் தேடுகிறோம்” என பதிவிட்டுள்ளார்.
இதற்கு ரசிகர்களும், திரை பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.