இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக அரசாங்கத்தை எதிர்த்து போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது அரசு ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர். இந்நிலையில் போராட்டம் கலவரமாக வெடித்தது. இதில் பொதுமக்கள் உட்பட பலருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் இலங்கை முழுவதும் அவசரநிலை பிறபிக்கப்பட்டது.
இந்த போராட்டத்தின் விளைவாக இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே ராஜினாமா தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து இலங்கைக்கு புதிய பிரதமராக ரனில் விக்ரமசிங்கே பதவியேற்றுக் கொண்டார்.
உதவியை நாடும் இலங்கை
கொலம்பியாவில் ஆகஸ்ட் ஜூன் 7 முதல் 10-ம் தேதி வரை உலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற உள்ளது. இலங்கையிலிருந்து தடகள வீரர்களை கொலம்பியாவில் நடக்கும் உலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கு அனுப்புவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் தடகள வீரர்களை கொலம்பியா அனுப்புவதற்கு விமான செலவாக 15 லட்சம் இலங்கை அரசிடம் இல்லை. இதனால் 15 லட்ச்சம் ரூபாய்க்காக தனியாரின் உதவியை இலங்கை அரசு எதிர்பார்ப்பதாக `தி ஐலேண்ட் ஆன்லைன்` இணையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்த இணையத்தில், “முதல் இரண்டு இடத்தில் இருக்கும் சிறந்த வீர்ரகள் இருவரை மட்டும் தங்கள் சொந்தப் பணத்தில் செல்ல அனுமதிக்க திட்டமிட்டுள்ளோம். இந்நிலையில் பணம் ஏற்பாடு செய்யமுடியாததால் தகுதியுடையவர்கள் செல்ல முடியவில்லை. எனவே, தடகள வீரர்களை கொலம்பியா அனுப்புவதற்க்கு தனியாரின் உதவியை நாடுகிறோம் என இலங்கை தடகளப்பிரிவின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்” என ஐலேண்ட் ஆன்லைன் இணையத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.