இன்னிக்கு நைட் ஸ்பெகட்டி பாஸ்தா…!
ஸ்பெகட்டி 250 கிராம்
உப்பு தேவையானது
ஆலிவ் ஆயில் 3 ஸ்பூன்
பூண்டு 2 நறுக்கியது
வெங்காயம் 1 நறுக்கியது
மிளகுத்தூள் 1 ஸ்பூன்
சர்க்கரை 1 ஸ்பூன்
சில்லி பிளேக்ஸ் 1 ஸ்பூன்
இட்டாலியன் சீசனிங் 2 ஸ்பூன்
அரைத்த தக்காளி விழுது
பேசில் இலை
பார்மஷான் சீஸ்
தக்காளியை வேகவைத்து பின் ஆறவிட்டு விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு வாணலில் ஸ்பெகட்டி சேர்த்து அதில் உப்பு போட்டு 20 நிமிடங்களுக்கு வேகவைக்க வேண்டும்.
வெந்ததும் தண்ணீரை வடித்து ஆலிவ் ஆயில் கலந்து விட வேண்டும்.
ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய பூண்டு,வெங்காயம்,தக்காளியை அடுத்து அடுத்ததாக போட்டு வதக்க வேண்டும்.
அதில் உப்பு,மிளகுத்தூள்,சர்க்கரை,சில்லி பிளேக்ஸ்,இட்டாலியன் சீசனிங் சேர்த்து வதக்கவும்.
அடுத்து வேகவைத்த ஸ்பெகட்டி சேர்த்து கலந்து பேசில் இலை மற்றும் பார்மஷான் சீஸ் சேர்த்து கலந்து இறக்கி விட வேண்டும்.