டேஸ்டியான பன்னீர் ஃபிரைட் ரைஸ் இன்னிக்கு சாப்பிடலாமா…
பன்னீர்-1கப்.
உப்பு- தேவையான அளவு.
மிளகாய் தூள்-1 தேக்கரண்டி
சோளமாவு-1 தேக்கரண்டி.
முட்டைகோஸ்-1கப்.
கேரட்-1கப்.
குடைமிளகாய்-1கப்.
வெங்காயம்-1கப்.
மிளகுத்தூள்-1 தேக்கரண்டி.
மிளகாய் தூள்-1 தேக்கரண்டி.
உப்பு-தேவையான அளவு.
இஞ்சிபூண்டு விழுது-1/2 தேக்கரண்டி.
சோயா சாஸ்-1 தேக்கரண்டி.
தக்காளி சாஸ்-1 தேக்கரண்டி.
எண்ணெய்-தேவையான அளவு.
வெங்காயத்தாள்- தேவையான அளவு.
பாஸ்மதி அரிசி-2கப்.
பாஸ்மதி அரிசியை வேக வைத்து சாதம் தயார் செய்து கொள்ள வேண்டும்.
பன்னீரை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதில் உப்பு, மிளகாய்த்தூள், சோள மாவு சேர்த்து கலந்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு வாணலை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய முட்டைக்கோஸ், கேரட், குடைமிளகாய், வெங்காயம் ஆகியவற்றை போட்டு வதக்கவும்.
பின் அத்துடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்க வேண்டும்.
மேலும் அத்துடன் வேக வைத்த சாதத்தை போட்டு அதனுடன் பொரித்த பன்னீர், மிளகாய்த்தூள், மிளகுத்தூள் மற்றும் உப்பு சேர்த்து கிளற வேண்டும்
பின் அத்துடன் சோயா சாஸ், தக்காளி சாஸ் சேர்த்து கிளறி பின் அதனுடன் வெங்காயத்தாள் கசக்கி சாதத்தில் தூவி இறக்கினால் சுவையான பன்னீர் பிரைட் ரைஸ் தயார்.
