அடுத்த முறை இத ட்ரைப் பண்ணுங்க..!
பெண்கள் என்னதான் சமையல் தெரிந்து வைத்திருந்தாலும் நான் சொல்லும் இந்த மாதிரி சில குறிப்புகளை தெரிந்து வைத்திருந்தால் தான் அவர்கள் வீட்டில் சமையல் ராணி என்று அழைக்கப்பட தகுதி அடைந்தவர்களாக இருப்பார்கள். வாங்க அது என்னவென்று பார்க்கலாம்.
- அவல் புட்டு செய்யும்போது முந்திரி, திராட்சை, தேங்காயை அப்படியே சேர்க்காமல் சிறிது வாணலில் வறுத்து பொடி செய்து சேர்க்க சுவையாக இருக்கும்.
- கொத்தமல்லி சட்னி அரைக்கும்போது புளியின் அளவினை குறைத்து அதற்கு பதிலாக எலுமிச்சை சாறு சேர்த்து செய்ய அதன் கலர் மாறாமல் கெட்டு போகாமலும் இருக்கும்.
- இஞ்சி பூண்டு அரைக்கும்போது அதில் உப்பு, ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அரைத்தால் கெட்டு போகாமலும் அதன் கலர் மாறாமலும் இருக்கும்.
- தேங்காய் பால் அரைக்கும்போது அதில் கொஞ்சமாக உப்பு சேர்த்து அரைக்க தேங்காய் பால் கூடிதலாக கிடைக்கும்.
- பச்சரிசி 4 கப் உளுந்தம் பருப்பு ஒரு கப் என அரைத்து அதில் சீரகம், உப்பு சேர்த்து தேங்குழல் செய்தால் சூப்பராக இருக்கும்.
- பாலை மிதமான சூட்டில் அதில் 1/2 ஸ்பூன் சர்க்கரை சேர்த்து அதில் தயிர் உறைக்கு ஊற்றி 8 மணி நேரத்திற்கு கழித்து பார்க்கும்போது தயிர் கெட்டியாக இருக்கும்.
- பலகாரங்கள் தயாரிக்கும் மாவில் சிறிது தேங்காய் எண்ணெய் விட்டு பிசைந்து செய்தால் பலகாரங்கள் நல்லா வாசனையாக இருக்கும்.
- மீன் குழம்பு செய்யும்போது சிறிது வெந்தயம் சேர்த்து தாளித்தால் மணம் சூப்பராக இருக்கும்.
- கத்தரிக்காயை வைத்து கூட்டு, பொரியல் என எது செய்தாலும் அதில் கொஞ்சம் கடலை மாவினை தூவி செய்ய சுவை அதிகமாக இருக்கும்.
- உளுத்த வடை மாவு ஆட்டும்போது அதில் கொஞ்சம் புதினா, கொத்தமல்லி, இஞ்சி சேர்த்து அரைத்து வடை செய்தால் நல்லா சுவை அதிகமாகவும் மணமாகவும் இருக்கும்.
- அரிசியில் பூச்சுகள் மற்றும் புழுக்கள் வராமல் இருக்க அதில் வரமிளகாய் அல்லது பிரியாணி இலை போட்டு வைக்கலாம்.
- டீ போடும்போது அதில் சிறிது பெருஞ்சீரகம் சேர்த்து கொதிக்கவைக்க டீ ருசியாக இருக்கும்.