பருப்பு கிச்சடி..! காலை உணவு..!
தேவையான பொருட்கள்:
அரிசி பருப்பு வேகவைக்க
பாஸ்மதி அரிசி – 1/2 கப்
பாசி பருப்பு – 1/2 கப்
தண்ணீர் உப்பு – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
பருப்பு கிச்சடி செய்ய
எண்ணெய் – 1 மேசைக்கரண்டி
நெய் – 1 மேசைக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
பிரியாணி இலை
பட்டை – 1சிறிய துண்டு
இஞ்சி – 1 துண்டு நறுக்கியது
பூண்டு – 5 பற்கள் நறுக்கியது
பச்சை மிளகாய் – 1 நறுக்கியது
வெங்காயம் – 1 நறுக்கியது
தக்காளி – 1 நறுக்கியது
உப்பு – 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
சீரக தூள் – 1/2 தேக்கரண்டி
தனியா தூள் – 1/2 தேக்கரண்டி
பெருங்காயத் தூள் – 1/4 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் – 1/2 தேக்கரண்டி
நெய் – 1 தேக்கரண்டி
கொத்தமல்லி இலை நறுக்கியது
செய்முறை:
பாஸ்மதி அரிசி மற்றும் பாசிப்பருப்பை கழுவி 30 நிமிடங்களுக்கு ஊற வைக்க வேண்டும்.
ஒரு குக்கரில் ஊறவைத்த அரிசி,பருப்பு,உப்பு,மஞ்சள்தூள் ஆகியவற்றை சேர்த்து 4 விசில் வரும் வரை வேக வைத்து எடுக்கவும்.
ஒரு வாணலில் எண்ணெய்,நெய் சேர்த்து அதில் சீரகம்,பிரியாணி இலை,பட்டை,இஞ்சி,பூண்டு,வெங்காயம்,பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
பின் அதில் தக்காளி சேர்த்து வதக்க வேண்டும். மிளகாய்த்தூள், சீரகத்தூள், உப்பு, தனியாதூள், பெருங்காயத்தூள் மற்றும் கரம் மசாலா தூள் சேர்த்து வதக்க வேண்டும்.
பின் அதில் வேக வைத்த அரிசி பருப்பு சேர்த்து கலந்து விட வேண்டும்.
கடைசியாக நெய் மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து கிளறி இறக்க வேண்டும்.
அவ்வளவுதான் சூடான பருப்பு கிச்சடி தயார்.