ஐபிஎஸ் அதிகாரி பேரில் மோசடி செய்த வடமாநிலத்தவர்..!! போலீசில் சிக்கியது எப்படி..!!
சென்னையில் ஐபிஎஸ் அதிகாரி திருநாவுக்கரசு பேரில் பணமோசடியில் ஈடுபட்ட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தமிழக முதலவர் பாதுகாப்பு பிரிவின் தலைவராக இருக்கும் டிஐஜி திருநாவுக்கரசு அவரது பேரில் போலி முகநூல் கணக்கு ஒன்றை தொடங்கி அதில் அவரது புகைப்படங்களை பயன்படுத்தி அவரது முகநூல் நண்பர்களிடம் பணம் பறித்துள்ளனர்.. இதுபற்றி அவருக்கு தெரியவந்தபோது அவள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்..
அதன் பேரில் அந்த முகநூலின் உடைய ஐபி அட்ரஸை வைத்து ட்ராக் செய்த போது அது ராஜஸ்தான் பகுதியை காட்டியுள்ளது.., பின்னர் சைபர் க்ரைம் போலீசார் அதனை ட்ராக் செய்து மோசடியில் ஈடுபட்ட ஹனிஃப்கான் மற்றும் வாஷித் கான் ஆகிய 2 பேரையும் கைது செய்து சென்னை அழைத்து வந்து விசாரணை செய்தனர்..
அப்போதே அவர்கள் எப்படி மோசடியில் ஈடுபட்டார்கள் என்பது தெரியவந்தது.., அதாவது டிஐஜி திருநாவுக்கரசு என்ற போலி முகநூலில் இருந்து அதில் உள்ள முகநூல் நண்பர்களுக்கு தனது நண்பன் எல்லைப்பாதுகாப்பு பிரிவில் பணியாற்றுவதால் தற்போது அவருக்கு டிரான்ஸ்பர் கிடைத்துள்ளது.. அவருடை வீட்டில் உள்ள விலையுர்ந்த பொருட்களை எடுத்து செல்ல முடியாததால் பாதி விலைக்கு கொடுக்க உள்ளார் என கூறி பணமோசடி செய்துள்ளனர்..
பின்னர் இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்..