மீன் கட்லெட் குழந்தைகளுக்கு செய்து கொடுங்க..!
தேவையான பொருட்கள்:
சமைத்த மீன் 250 கிராம்
உருளைக்கிழங்கு 200 கிராம்
கேரட் 75 கிராம்
வெங்காயம் 100 கிராம்
இஞ்சி பூண்டு விழுது 1 1/2 ஸ்பூன்
பச்சை மிளகாய் 2
மஞ்சள்தூள் 1/4 ஸ்பூன்
மிளகாய்த்தூள் 1 ஸ்பூன்
கொத்தமல்லி இலை நறுக்கியது
முட்டை 2
பிரட் தூள்கள் 150 கிராம்
உப்பு தேவையானது
செய்முறை:
முதலில் வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி இலை ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
மீனை நன்றாக பிசைந்துக் கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் உருளைகிழங்கில் உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின் ஆறியவுடன் தோலை உரித்துக் கொள்ள வேண்டும்.
ஒரு ஃபேனை அடுப்பில் வைத்து 2 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து சூடானதும் அதில் வெங்காயம், மிளகாய், கேரட் ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும்.
பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.
பின் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து வதக்க வேண்டும்.
இதில் உருளைக்கிழங்கு, மசித்த மீன், உப்பு, கொத்தமல்லி இலை ஆகியவற்றை சேர்த்து கலந்து விட வேண்டும்.
இந்த கலவையை சிறிது கனமாக கட்லெட் தட்டிக் கொள்ள வேண்டும்.
முட்டையை ஒரு கிண்ணத்தில் உடைத்து ஊற்றி அடித்துக் கொள்ள வேண்டும்.
பிரட் தூள்களை ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலில் எண்ணெய் சேர்த்து சூடாக்கவும்.
கட்லெட்டை முதலில் முட்டையில் நனைத்து பின் பிரட் தூள்களில் பிரட்டி எடுத்து எண்ணெயில் சேர்த்து இரண்டு பக்கமும் பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
இதுபோல மீதமுள்ள அனைத்து கட்லெட்டுகளையும் பொரித்து எடுக்க வேண்டும்.