பரவும் டெங்கு காய்ச்சல்.. தடுக்கும் முயற்சியில் தமிழக அரசு..!
தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் வேகமாக் பரவி வருகிறது. இதுவரை இந்த ஆண்டில் மட்டும் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இந்த காய்ச்சல் பரவலை தடுப்பதற்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது.
11 துறைகள் இணைந்து நடத்தப்பட்ட இந்த ஆலோசனை கூட்டத்தில் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தை தொடர்ந்து அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர் அரசின் தீவிர முயற்சியால் டெங்கு காய்ச்சலின் பரவல் கட்டுப்படுத்த பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளை காட்டிலும் இந்த ஆண்டு வெறும் 4 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர் என்று தெரிவித்தார்.
மேலும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு தேவையான மருந்துகள், பரிசோதனை கருவிகள் தேவையான அளவு கையிருப்பில் உள்ளன என்றும் கூறினார்.
இதுமட்டுமின்றி கொசுக்களை அழிப்பதற்காக மருந்து தெளிப்பது மற்றும் புகை அடிப்பது போன்ற பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.