வாற்கோதுமை லொங்கன் பழ இனிப்பு…!!
தேவையானப் பொருட்கள்:
• ¾ கோப்பை வாற்கோதுமை மணிகள் (முழுத்தானியம்)
• 100 கிராம் கனசதுரங்களாக வெட்டப்பட்ட சர்க்கரைவள்ளிக்கிழங்கு
• 200 கிராம் கனசதுரங்களாக வெட்டப்பட்ட பப்பாளி
• ¼ கோப்பை கழுவி ஊறவைக்கப்பட்ட வெள்ளைக் காளான்கள்
• 10 கிராம் (2 தேக்கரண்டி) சர்க்கரைக் கட்டிகள் (தேவைப்பட்டால்)
• 1.2 லிட்டர் தண்ணீர்
• 6 ஓடு, விதைகள் நீக்கப்பட்டு உலரவைக்கப்பட்ட அல்லது புதிய லொங்கன் பழம்
செய்யும் முறை:
1. வாற்கோதுமையை தண்ணீரில் அலசி, 15-20 நிமிடங்களுக்குத் தண்ணீரில் வேகவைக்கவும்.
2. சர்க்கரைவள்ளிக் கிழங்குகளை அதில் சேர்க்கவும்.
3. வாற்கோதுமை மற்றும் சர்க்கரைவள்ளிக்கிழங்குகள் நன்கு வெந்து வந்ததும், வெள்ளைக் காளான்கள் மற்றும் சர்க்கரைக் கட்டியை (விரும்பினால்) சேர்க்கவும்.
4. நன்றாக கலக்கவும்.
5. பப்பாளி மற்றும் லொங்கன் பழத்தை அத்துடன் சேர்க்கவும்.
6. சூடாகவோ அல்லது குளிர்ச்சியாகவோ சாப்பிடலாம்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
![](https://www.madhimugam.com/wp-content/uploads/2024/07/002-10-x-15-a.jpg)