ADVERTISEMENT
சுவையான பாலாடைக்கட்டி காய்கறி ஆம்லெட்…!
தேவையானப் பொருட்கள்:
• ¼ கோப்பை பசலைக் கீரை – (உறைந்த காய்கறிகள் அல்லது உங்களுக்கு பிடித்தமான காய்கறிகளையும் மாற்றாகப் பயன்படுத்தலாம்)
• 4 முட்டைகள்
• 1 தக்காளி
• ¾ கோப்பை (65 கிராம்) துருவப்பட்ட பாலாடைக்கட்டி
• 1 வெள்ளைப்பூண்டு, சிறியதாக நறுக்கியது
• ½ நறுக்கிய வெங்காயம்
• 1 மேசைக்கரண்டி எண்ணெய்
• ½ கோப்பை (125 மில்லிலிட்டர்) குறைந்த கொழுப்புள்ள பால் அல்லது கால்சியம் நிறைந்த சோயா பால்
• சுவைக்கு மிளகு
செய்யும் முறை:
1. ஒரு பாத்திரத்தில் முட்டை ஒடச்சி ஊற்றி அதனுடன் மிளகு சேர்த்து நன்றாக அடித்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் காய்கறி, தக்காளி ,பாலாடைக்கட்டி, பூண்டு, வெங்காயம், பால் ஆகியவற்றை நன்றாக கலக்கவும்.
2. தோசைகல்லை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடு படுத்தவும்.
3. பின் முட்டை மற்றும் பால் கலவையை அதில் ஊற்றவும்.
4. சீரான வெப்பத்தில் அடுப்பை வைத்து ஒரு 15 நிமிடத்திற்கு வேக வைக்கவும். பின் ஆறியவுடன் சாப்பிடலாம்.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.