850 கோடி மதிப்பில் கையெழுத்தான ஒப்பந்தம்..!! சென்னை கோவைக்கு வர போகும் தொழில் நுட்பங்கள்..?
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி தமிழ்நாட்டில் முதலீட்டாளர்களை ஈற்பதற்காக அமெரிக்க அரசு முறை பயணம் சென்றுள்ளார்.. அமெரிக்க சென்ற நாளில் இருந்து ஒவ்வொரு தொழில் நிறுவனங்களுடனான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு வருகிறது..
முன்னதாக தமிழ்நாட்டில் 4,100 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் விதமாக 900 கோடி ரூபாய் முதலீட்டில் பேபால், நோக்கியா, மற்றும் மைக்ரோசிப் உள்ளிட்ட பல நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.., அதன் பின் 400 கோடி ரூபாய் முதலீட்டில் ஓமியம் (Ohmium) நிறுவனத்துடனும் 5௦௦ பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது..
அமெரிக்காவின் சிகாகோ ஈட்டன் மற்றும் அஷ்யூரன்ட் நிறுவனத்துடனான 200 கோடி ரூபாய் முதலீட்டில், 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கடந்த செப்டம்பர் 4ம் தேதி கையெழுதிப்பட்டது., இந்த திட்டமானது சென்னையில் ஈட்டன் நிறுவனத்தின் உற்பத்தியை பெறுக்கும் வகையில் அமையப்போவதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்..
அதனை தொடர்ந்து நேற்று அமெரிக்கா சிகாகோவில் உள்ள “அஷ்யூரன்ட், ஈட்டன்” போன்ற முதன்மை நிறுவனத்தின் CEO-வை சந்தித்து தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கான திட்டம் குறித்து ஆலோசித்துள்ளார்., அதன் பின்னர் 2௦௦ கோடி ரூபாய் முதலீட்டில் 5௦௦ பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் திட்டமானது கையெழுத்தானது.. அதன் பின்னர் சென்னையில் ஏ.ஐ.ஆய்வகம் அமைப்பதற்கான கூகுள் நிறுவனத்திடம் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.., அதனை தொடர்ந்து அமெரிக்காவின் புகழ்பெற்ற டிரில்லியன் நிறுவனத்துடன் 2௦௦௦ கோடி புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது..
இதுவரையில் பிரபல தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு வந்த நிலையில் இன்று காலை அமெரிக்காவின் சிகாகோவில் 850 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் ஸ்டாலின் முன் கையெழுதிடப் பட்டுள்ளது.
முன்னதாக 500 கோடி ரூபாய் முதலீட்டில் “லிங்கன் எலக்ட்ரிக் நிறுவனதுடன் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு உற்பத்தி மையத்தை விரிவாக்கம் செய்வதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
அதன் பின் 100 கோடி முதலீட்டில் விஷய் பிரிஷிஷன் நிறுவனத்துடன் காஞ்சிபுரத்தில் சென்சார்ஸ் மற்றும் டிரான்ஸ்டியூசர்ஸ் (Sensors and Transducers) 2 மையத்தை தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
அதனை தொடர்ந்து 250 கோடி ரூபாய் முதலீட்டில் சென்னை மற்றும் கோவையில் மின்னணு உற்பத்தி மையத்தை நிறுவுவதற்காக விஸ்டியன் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுதிடப் பட்டுள்ளது..
இந்த கையெழுத்தான ஒப்பந்தங்கள் குறித்த தகவல்களை முதலமைச்சர் ஸ்டாலின் எக்ஸ் வலைத்தளம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்… வாய்ப்புகளின் நிலத்தில், ஒவ்வொரு புதிய விடியலும் புதிய நம்பிக்கைகளைத் தூண்டுகிறது. லிங்கன் எலக்ட்ரிக், விஷே துல்லியம் மற்றும் விஸ்டியன் நிறுவனங்களுடன் ₹850 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களைப் பெற்றுள்ளோம். இடைவிடாத முயற்சி மற்றும் உறுதியின் மூலம், நாம் தொடர்ந்து நம் கனவுகளை நிஜமாக்குகிறோம்.. என அவர் தனது எக்ஸ் வலைத்தளம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..