புளிச்சக்கீரை சிக்கன் பிரியாணி..!
தேவையான பொருட்கள்:
புளிச்ச கீரை விழுது செய்ய:
புளிச்ச கீரை – 1 கட்டு
பச்சை மிளகாய் – 3 கீறியது
எண்ணெய் – 1 தேக்கரண்டி
உப்பு – 1/2 தேக்கரண்டி
தண்ணீர்
புளிச்ச கீரை சிக்கன் பிரியாணி செய்ய:
பாஸ்மதி அரிசி – 500 கிராம்
சிக்கன் – 1 கிலோ
மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
உப்பு – 1 1/2 தேக்கரண்டி
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
நெய் – 2 மேசைக்கரண்டி
பிரியாணி இலை – 1
அன்னாசிப்பூ – 1
ஜாதிபத்திரி பட்டை
மராத்தி மொக்கு
சோம்பு – 1 தேக்கரண்டி
ஏலக்காய் – 3
கிராம்பு – 3
கல் பாசி
வெங்காயம் – 3 நறுக்கியது
பச்சை மிளகாய் – 3
இஞ்சி பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
தக்காளி – 3 நறுக்கியது
உப்பு – 1 தேக்கரண்டி
கொத்தமல்லி இலை சிறிது
செய்முறை:
சிக்கனை சுத்தம் செய்து அதில் ஒரு ஸ்பூன் மஞ்சள்தூள், இரண்டு ஸ்பூன் மிளகாய்த்தூள், ஒன்றரை ஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ள வேண்டும்.
ஒரு வாணலை அடுப்பில் வைத்து அதில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதில் ஒரு கட்டு புளிச்சைக்கீரை மற்றும் மூன்று பச்சை மிளகாய் கீறி சேர்த்து வதக்க வேண்டும்.
அதில் உப்பு சேர்த்து நன்றாக கலந்து ஆறவைத்து பின் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு குக்கரை அடுப்பில் வைத்து அதில் இரண்டு ஸ்பூன் நெய், இரண்டு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கொள்ள வேண்டும்.
பின் அதில் பிரியாணி இலை, அன்னாசிபூ, ஜாதிபத்திரி, பட்டை, மராத்தி மொக்கு, சோம்பு, ஏலக்காய், கல் பாசி, கிராம்பு சேர்த்து வதக்க வேண்டும்.
தாளித்ததும் மூன்று நறுக்கிய வெங்காயம், மூன்று நறுக்கிய பச்சை மிளகாய், இரண்டு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.
பின் அதில் நறுக்கிய மூன்று தக்காளி சேர்த்து வதக்க வேண்டும்.
ஊறவைத்த சிக்கன் துண்டுகளை சேர்த்து கலந்து வேகவைக்க வேண்டும்.
அதில் அரைத்த புளிச்சைக்கீரை சேர்த்து கலந்து அதில் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி இரண்டு விசில் வரும் வரை வேகவைக்கவும்.
பின் குக்கரை திறந்து ஊறவைத்த பாஸ்மதி அரிசி சேர்த்து கலந்து அதில் நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி கலந்து குக்கரை மூடி 5 நிமிடம் வேகவைத்து பின் ஆவி குறைந்ததும் குக்கரை திறத்து பார்த்து கிளறிவிட்டால் புளிச்சக்கீரை