தேவநாதன் யாதவ் நிதி நிறுவன மோசடி வழக்கு..!! பின்னணி இணைப்பில் உள்ள பிரபல கட்சி..!!
சென்னை மயிலாப்பூர் தெற்கு மாடவீதியில் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த “தி மயிலாப்பூர் இந்து பர்மனென்ட் ஃபண்ட் லிமிடெட்” என்ற பெயரில் நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. அந்த நிதி நிறுவனத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணத்தை அதில் டெபாசிட் செய்து பணத்தை இழந்துள்ளனர்.. அந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள சுமார் 525 கோடி பணத்தை முதலீட்டாளர்களுக்கு திரும்ப கொடுக்க மறுத்ததால் ஏமாற்றப்பட்ட மக்கள் அந்நிறுவனத்தின் மீது பாதிக்கப்பட்ட மக்கள் புகார் அளித்துள்ளனர்..
புகாரின் பேரில் கடந்த ஆகஸ்ட் 13ம் தேதி நிதி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தேவநாதன் யாதவ் மற்றும் நிதி நிறுவன இயக்குநர் குணசீலன, புதுக்கோட்டையில் காவல் துறையினர் அதிரடியாக கைது செய்தனர். அதன் பின் மகிமை நாதன் சென்னையில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்..
விசாரணையில் வெளிவந்த பகீர் பதிவு :
அந்த விசாரணையில் பல பகீர் தகவல்கள் வெளிவந்தது.. நிதி நிறுவனத்தின் மூலமா மக்களிடம் இருந்து வசூல் செய்த பணத்தை கடந்த 2019-ம் ஆண்டு ஆந்திராவில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்ட ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்களுக்கு முதலீடு செய்துள்ளார். அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பணத்தை அதிக வட்டிக்கு கடனாக கொடுத்துள்ளார். அப்படி தேவநாதனிடம் இருந்து கோடிக்கணக்கில் கடனாக பெற்ற பணத்தை தான் ஜெகன்மோகன் ரெட்டி தேர்தலில் செலவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.. அதன் பின் ஜெகன்மோகன் ரெட்டி வெற்றி பெற்றுள்ளார்.
2019ம் ஆண்டு கடனாக வாங்கிய பணத்தை நடப்பு ஆண்டு வரை மாதா தோறும் வட்டியாக, கடந்த மே மாதம் வரை தேவநாதனின் ஆட்கள் மூலம் அவர்கள் தவறாமல் செலுத்தி வந்ததாக தெரிகிறது. அதேபோல, தற்போது நடைபெற்ற லோக்சபா தேர்தல் மட்டும் சட்டமன்ற தேர்தல் இரண்டிற்கும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பலருக்கு தேவநாதன் கோடிக்கணக்கில் பணம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் 175 பேரில் 164 பேர் தோல்வி அடைந்துள்ளனர்.
இதனால், தேவநாதன் கொடுத்த பணத்திற்கான வட்டி சரிவர தற்போது அக்கட்சி நிர்வாகிகள் தருவதில்லை என கூறப்படுகிறது. வட்டியே சரியாக வராத நிலையில் அசல் எப்படி வருமோ என நினைத்த தேவநாதன் யாதவ் ஜெகன்மோகன் ரெட்டியை தொடர்பு கொண்டு பேச முற்படுவதாக சொல்லப்படுகிறது..