பிரபல நிறுவனத்தின் மேனேஜர் வீட்டில் கொள்ளை..! பரபரப்பான திருவேற்காடு..!
திருவேற்காட்டில் பிரபல தனியார் நிறுவனத்தின் மேலாளர் வீட்டில் 100 சவரன் நகை மற்றும் 50,000 ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை அடுத்த திருவேற்காட்டில் கடந்த சில தினங்களாகவே தொடர் கொள்ளை சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. குறிப்பாக கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம் திருவேற்காடு கோ-ஆப்ரேட்டிவ் நகர் பகுதியில் வசிக்கும் தாட்சாயணி வெளியூறுக்கு சென்றுவிட்டு 2 நாட்களுக்கு பின் வீடு திரும்பியுள்ளார். இதற்கிடையில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். அந்த சம்பவம் குறித்து காவலநிலையத்தில் புகார் அளித்தும் தற்போது கொள்ளையர்கள் பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதனை தொடர்ந்து திருவேற்காடு தேவி கருமாரியம்மன் நகர் பகுதியில் முருகேசன் என்பவரது வீட்டிலும் கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளது. பிரபல தனியார் நிறுவனத்தின் மேலாளர் கடந்த வாரம் வெளியூர் சென்றுள்ளதாக சொல்லப்படுகிறது. அதனை பயன்படுத்திகொண்ட அந்த கொள்ளையர் வீட்டில் இருந்த 100 சவரன் நகை மற்றும் 50,000 ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர்.., விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இப்படியாக திருவேற்காடு பகுதியில் தொடர் கொள்ளை சம்பவங்கள் நடப்பதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதனை நிரந்தரமாக நிறுத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..