முட்டைக்கோஸ் கூட்டு..!
தேவையான பொருட்கள்:
கடலை பருப்பு கால் கப்
தண்ணீர்
மஞ்சள்தூள்
உப்பு
தேங்காய்த்துண்டுகள் கால் கப்
பச்சை மிளகாய் 3
சீரகம்
எண்ணெய்
உளுத்தம் பருப்பு
கடுகு
காய்ந்த மிளகாய்
பெருங்காயத்தூள்
வெங்காயம் 1
தக்காளி 1
முட்டைக்கோஸ் 250 கிராம்
மிளகாய்த்தூள் 1 ஸ்பூன்
சாம்பார் தூள் 1 ஸ்பூன்
கறிவேப்பிலை
செய்முறை:
கடலை பருப்பை 4 மணி நேரத்திற்கு ஊற வைக்க வேண்டும்.
ஒரு குக்கரில் ஊறவைத்த கடலை பருப்பு,மஞ்சள் தூள்,தண்ணீர்,உப்பு சேர்த்து ஒரு விசில் விட்டு இறக்கவும்.
தேங்காய்த்துண்டுகள்,பச்சை மிளகாய்,சீரகம்,தண்ணீர் சேர்த்து இரு மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலில் எண்ணெய் சேர்த்து அதில் உளுத்தம் பருப்பு,கடுகு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள்,வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.
பின் அதில் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்க வேண்டும்.
அதற்கு பிறகு நறுக்கிய முட்டைக்கோஸ்,மிளகாய்த்தூள்,சாம்பார் தூள்,வேகவைத்த பருப்பு ஆகியவற்றை சேர்த்து வதக்கி பின் அதனை வேக வைக்கவும்.
பின் அரைத்த மசாலா சேர்த்து கலந்து வேகவைக்கவும்.
கடைசியாக கறிவேப்பிலை சேர்த்து கலந்து விடவும்.
அவ்வளவுதான் சுவையான முட்டைக்கோஸ் கூட்டு தயார்.