செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 58 வது முறையாக நீட்டிப்பு..!
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 58 வது முறையாக நீட்டிப்பு செய்துள்ளனர். 2022 ஆம் ஆண்டு ஜீன் மாதம் சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் இருந்து விடுவிக்ககோரி செந்தில் பாலாஜியின் தரப்பில் இருந்து அளித்த மனுவை தள்ளுபடி செய்தது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
செந்தில் பாலஜியின் தரப்பில் இந்த உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்தனர். இதற்கு சென்னை ஐகோர்ட்டும் தள்ளுபடி செய்த நிலையில் செந்தில் பாலாஜி ஜாமின் வழங்க கோரி சென்னை உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்று முடிவடைந்ததை ஒட்டி அவர் இன்று நீதிபதி அல்லி முன்பு ஆஜரானார்.
நீதிபதி அல்லி அவர்கள் செந்தில் பாலாஜியின் காவலை செப்டம்பர் 5 ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்தார். இதனால் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவம் 58-வது முறையாக நீட்டிப்பு செய்யப்பட்டது.