இன்னிக்கு உருளைக்கிழங்கு தம் பிரியாணி செய்யலாமா…!
தேவையான பொருட்கள்:
மசாலா விழுது தயாரிக்க
இஞ்சி – 1 துண்டு
பூண்டு – 2 பற்கள்
பச்சை மிளகாய் – 2
சிவப்பு மிளகாய் – 2
தயிர் – 1 மேசைக்கரண்டி
புதினா இலைகள்
கொத்துமல்லி இலை
பிரியாணி சமைக்க
பாஸ்மதி அரிசி – 200 மில்லி
உருளைக்கிழங்கு – 200 கிராம்
நெய்
எண்ணெய்
வெங்காயம் – 2
தக்காளி – 3
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
அன்னாசி பூ, ஏலக்காய், பட்டை, கிராம்பு,
பிரியாணி இலை
குங்குமப்பூ
உப்பு
செய்முறை:
அரிசியை சுத்தம் செய்து 30 நிமிடங்களுக்கு ஊற வைக்க வேண்டும்.
ஒரு வெங்காயத்தை எடுத்து மெல்லியதாக நறுக்கி அதனை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு வாணலில் வேகவைத்த உருளைக்கிழங்கை சேர்த்து உப்பு போட்டு பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடானதும் பட்டை,லவங்கம்,கிராம்பு,ஏலக்காய்,அன்னாசி பூ,பிரியாணி இலை சேர்த்து அதனுடன் ஊறவைத்த அரிசியை சேர்த்து முக்கால் பதத்திற்கு வேக வைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு கிண்ணத்தில் சூடான பாலில் சிறிது குங்குமப்பூ சேர்த்து கரைத்து தனியே வைக்கவும்.
மசாலா விழுது அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை எல்லாம் மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் நெய் சேர்த்து சூடானதும் பட்டை,கிராம்பு,பிரியாணி இலை,ஏலக்காய் மற்றும் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்க வேண்டும்.
இதனுடன் அரைத்த மசாலா விழுது சேர்த்து வதக்க வேண்டும்.
பின் இதில் வறுத்த உருளைக்கிழங்கை சேர்த்து வதக்க வேண்டும்.
பின் அதில் வறுத்த வெங்காயத்தை சேர்த்து வேகவைத்த அரிசியை சேர்த்து பின் கரைத்த குங்குமபூ கலவை சேர்த்து கலந்து பாத்திரத்தை மூடி பத்து நிமிடங்களுக்கு சிம்மில் வைத்து வேகவைக்கவும்.
அவ்வளவுதான் சுவையான உருளைக்கிழங்கு தம் பிரியாணி தயார்.