சாம்பார் வடை எப்படி செய்வது..?
தேவையான பொருட்கள்:
உளுத்தம் பருப்பு 250 கிராம்
அரிசி மாவு 1 ஸ்பூன்
சோடா மாவு 1/2 ஸ்பூன்
வெங்காயம் 1
மிளகு 1 ஸ்பூன் நுணுக்கியது
இஞ்சி ஒரு துண்டு
கறிவேப்பிலை சிறிது
பச்சை மிளகாய் 1
எண்ணெய் தேவையானது
தயிர் தேவையானது
உப்பு தேவையானது
செய்முறை:
முதலில் உளுத்தம் பருப்பை கழுவி பின் 45 நிமிடங்களுக்கு ஊறவைக்க வேண்டும்.
வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை ஆகியவற்றை நறுக்கிக் கொள்ள வேண்டும்.
மிளகை நுணுக்கிக் கொள்ள வேண்டும்.
ஊறவைத்த உளுத்தம் பருப்பை உப்பு, சோடா மாவு சிறிது நீர் விட்டு நைசாக அரைத்து கொள்ள வேண்டும்.
அந்த மாவில் நறுக்கி வைத்துள்ள அனைத்தையும் சேர்த்து கலந்து விடவும்.
மாவு நீர் விட்டு இருந்தால் அரிசி மாவு சேர்த்து கலந்துக் கொள்ளலாம்.
இந்த மாவை அப்படியே 2 மணி நேரத்திற்கு வைக்க வேண்டும்.
ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் மாவில் ஒரு உருண்டை எடுத்து கையில் வட்டமாக தட்டி ஓட்டை போட்டுக் கொண்டு எண்ணெயில் போட்டு இருபுறமும் பொன்னிறமாக சுட்டு எடுக்கவும்.
பக்கத்தில் மற்றொரு அகலமான பாத்திரத்தில் சாம்பார் வைத்துக் கொள்ள வேண்டும்.
அனைத்து வடைகளையும் சுட்ட பிறகு அதனை சாம்பாரில் போட்டு ஒரு கொதி விட்டு கொத்தமல்லி இலை தூவி இறக்க வேண்டும்.
இதனை நீங்கள் புதுசாகவும் செய்யலாம். இல்லையென்றால் வடை செய்யும்போது வடை மீந்துபோனாலும் இதை நீங்கள் செய்யலாம்.