இளம் பெண்ணை காவல் ஆய்வாளரே ஆசை வார்த்தை கூறி மோசம் செய்ததால் பரபரப்பு…
பென்னாகரம் அருகே இளம் பெண்ணை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிய சிறப்புகாவல் உதவி ஆய்வாளரை காவல்துறையினர் போக்சோ வழக்கில் கைது செய்தனர்.
தருமபுரி மாவட்டம் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் சகாதேவன். இவர் ஏரியூர் காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் ஏரியூர் பகுதியைச் சேர்ந்த 18 வயது இளம் பெண்ணுடன் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது.
அப்போது இளம் பெண்ணிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அவருடன் பழகி ஏமாற்றியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், தன் மகளை திருமணம் செய்வதாககூறி கர்பமாக்கி ஏமாற்றியதாகவும் அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பெண்ணின் பெற்றோர் புகார் அளித்தனர்.
இதனை அடுத்து பென்னாகரம் மகளிர் காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சகாதேவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.