ADVERTISEMENT
2வது திமுக இளைஞரணி இருசக்கர வாகன பேரணிக்கு உற்சாக வரவேற்பு-“கரூர்”
2வது திமுக இளைஞரணி மாநில மாநாட்டையொட்டி கரூர் மாவட்டத்தை வந்தடைந்த இருசக்கர வாகன பேரணிக்கு மாநகராட்சி மேயர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
திமுக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு டிசம்பர் மாதம் 17ஆம் தேதி சேலத்தில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை திமுகவினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், திமுக இளைஞரணி மாநில மாநாட்டையொட்டி இருசக்கர வாகன பேரணி கரூர் மாவட்ட ‘அரவக்குறிச்சி’ சட்டமன்றத் தொகுதிக்கு வந்தனர்.
அதனைத் தொடர்ந்து கரூர் சட்டமன்றத் தொகுதியில் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தார்.
கரூர் பேருந்து நிலையம் மனோர ரவுண்டானா, தின்னப்பா கார்னர் வெங்கமேடு, அரசு காலணி, பசுபதிபாளையம் மற்றும் கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதி குளித்தலை சட்டமன்ற தொகுதி பகுதிகளில் பகுதிகளில் இன்று இரண்டு சக்கர விழிப்புணர் பேரணி .
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.