வேலூர் காட்பாடியில் வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் கொள்ளை…
வேலூர் காட்பாடியில் வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடி மாருதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் குமார் என்பவர் நெடுஞ்சாலைத் துறையில் வேலை செய்து வருகிறார்.
இவர் வேலை நிமிர்த்தமாக கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு திருவண்ணாமலைக்கு சென்றுள்ள நிலையில், வீட்டில் குமாரின் சகோதரர் இருந்து வந்துள்ளார். இவர், வேலைக்காக சென்றுவிட்டு வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த சுமார் 40 சவரன் தங்க நகைகள் திருடப்பட்டது தெரியவந்தது.
இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து, காவல்துறையினர் கைரேகை நிபுணர்களுடன் விரைந்து சென்று வீட்டில் சோதனை நடத்தினர். மேலும், வழக்குப்பதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்டவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.