மதுராந்தகத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்..
மதுராந்தகத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு மேற்கொண்டனர்.
செங்கல்பட்டு மாவட்டம் புக்கதுறை ஊராட்சியில், நடைபெற்று வரும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் பழங்குடியினர் விரிவான மேம்பாட்டுத் திட்டம், கீழ் பழங்குடியினத்தை சேர்ந்த 6 நபர்களுக்கு தலா 4.37 இலட்சம் மதிப்பிலான வீடுகள் கட்டப்பட்டு வருகிறது.
இதனை மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சமயமூர்த்தி ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வுகளின் போது அரசுத்துறை அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.