தனியார் கல்லூரி பேருந்து மோதி கணவன் மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்
திருப்பூரில் தனியார் கல்லூரி பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற கணவன் மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது, அதிவேகமாக வந்த தனியார் கல்லூரி பேருந்து மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த கணவன், மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு காவல் துறையினர் உயிரிழந்த இருவரின் சடலங்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
