ஏ.சி.யின் கரண்ட் பில்லை கண்டு இனி பயப்பட வேண்டாம்..! இப்படி செய்யுங்க..!
-
ஏ.சி நல்ல குளிர்ச்சியை தர வேண்டும் என்று நினைத்து சிலர் ஏசியை குறைவான வெப்பநிலையில் வைப்பது தவறு. காரணம் அவ்வாறு வைத்தால் அது அதிக மின்சாரத்தை உறிஞ்சும்.மின்சார செலவும் அதிகமாகும். 20 டிகிரிக்கு மேல் வைத்தால் சரியாக இருக்கும்.
-
ஏ.சியை கட்டாயம் 15 நாட்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்ய வேண்டும். ஏசியின் ஃபில்டரை சுத்தம் செய்யாவிடில் அது விரைவாக குளிராகாது.
-
ஏ.சி இருக்கும் அறையின் கதவு மற்றும் ஜன்னலை கட்டாயம் மூடி வைக்க வேண்டும். மூடவில்லை என்றால் வெளியில் இருந்து வரும் அனல் காற்றினால் ஏசியின் குளிர் காற்று உட்புறத்தை குளிர்விக்க அதிக நேரம் தேவைப்படலாம்.
-
பலருக்கு ஏ.சி ஓடும்போது சீலிங்பேன் போடலாமா என்ற சந்தேகம் வரும். பொதுவாக ஏ.சி போகும்போது மின் விசிறியை பயன்படுத்தினால் குளிர்க்காற்று அறையின் மூலை முடுக்கிலும் சென்றடையும். இதனால் மின்சார செலவு கட்டுப்படும்.
-
ஏ.சி ரிமோட்டில் இருக்கும் டைமரை ஆன் செய்துவிட்டால், அறை குளிர்ந்ததும் ஏ.சி தானாக ஆப் ஆகிவிடும். இதனால் மின்சாரச் செலவை கட்டுப்படுத்தலாம்.
-
ஜன்னலில் இருந்து வரும் வெளிச்சத்தை குறைக்க ஜன்னலுக்கான திரைசீலையை பயன்படுத்தலாம்.
-
இன்வெர்ட்டர் ஏ.சி மின்சார பயன்பாட்டு அளவை குறைக்கும்.
-
அறைக்கு தேவையான அளவுடன் கொண்ட ஏ.சியை வாங்கி பயன்படுத்த வேண்டும்.