உயிருக்கு போறடிய பெண் யானை.. காப்பாற்றிய வனத்துறையினர்க்கு குவியும் பாராட்டுகள்..!
கோவை மாவட்டம் மருதமலை அடிவாரத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 40 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று
நோய்வாய்ப்பட்ட நிலையில் கண்டறியப்பட்டது. அந்த யானையுடன் நான்கு மாத ஆண் குட்டி யானையும் இருந்தது.
தொடர்ந்து அந்த யானையை கைப்பற்றிய வனத்துறையினர் யானைக்கு வனத்துறையின் மருத்துவக்குழுவினர் மூலம் தொடர் சிகிச்சை அளித்து வந்தனர்.
மேலும் யானையை கிரேன் வாகனத்தின் உதவியுடன் தூக்கி நிறுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
யானைக்கு சத்து மாத்திரைகளை புளி, வெல்லம் ஆகியவற்றுடன் இடித்து சோற்றில் வைத்து உணவும் வழங்கப்பட்டது.
இதனிடையே பெண் யானைக்கு தற்போது உடல் நிலை சரியானதால் வனத்துறையினர், அந்த யானையை வனப்பகுதிக்குள் விடுவித்தனர்.
உயிரிழக்கும் தருவாயில் இருந்த யானைக்கு சிகிச்சை அளித்து காப்பாற்றிய வனத்துறையினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றது.
-பவானிகார்த்திக்