கூந்தல் உடைதலுக்கும் , உதிர்வுக்கும் ஒரு சூப்பரான டிப்ஸ்..! குறிப்பு -1
சில பெண்களுக்கு கூந்தல் அடர்த்தியாக இருந்தாலும், அவர்களுக்கு கூந்தல் உடைவது மிக பெரிய பிரச்சனையாக இருக்கிறது. சில பெண்களுக்கு முடி உதிர்வது மிக பெரிய கவலையாக இருக்கும். இந்த கூந்தல் உடைவதாலும் உதிர்வதாலும் முகம் கலை இழந்து காணப்படுகிறது. இது போன்ற பிரச்சனைக்கு என்ன பண்றது தெரியமா குழப்பத்தில் இருபவரா நீங்கள்..? இனி கவலையே வேண்டாம் இதை ட்ரை பண்ணுங்க..
கூந்தல் உடைவது ஏன் தெரியுமா..?
ஷாம்பூகளை மாற்றுவது :-
சிலருக்கு தலைக்கு உபயோகிக்கும் ஷாம்பூகளை அடிக்கடி மாற்றும் பழக்கம் இருக்கும். நாம் பயன்படுத்தும் ஷாம்பூகளை மாற்றி மாற்றி பயன்படுத்துவதனால். கூந்தலின் ஓரங்களில் முடி உடைய தொடங்கும், காரணம் ஷாம்பூவில் உலா தன்மை மாறுபடுவதால்.
ஹேர் வாஷ் :-
அதிகமாக நாம் ஹேர் வாஷ் செய்வதால் கூட நம் கூந்தலானது வெடிப்பு தன்மையை அடைந்து, முடியை உடைய செய்து விடும். வாரத்திற்கு இரண்டு முதல் மூன்று நாட்கள் நாம் ஹேர் வாஷ் செய்து கொள்ளலாம்.
அதிகப்படியான வெப்பம் :-
நம்மில் சில பெண்கள் அதிகமாக ஹேர் ஸ்ட்ரெயிட்டனர், மற்றும் ஹேர் ட்ரையர் போன்ற மெஷின்களை பயன்படுத்திகிறோம். இதனால் அதிகபடியான வெப்பம் நம் கூந்தலில் வந்து சேர்கிறது. இந்த மாதிரியான மெஷின்களை பயன் படுத்தும் பொழுது நம் கூந்தலானது உடையவும் , உதிரவும் தொடங்கும்.
தலையில் எண்ணெய் தேய்க்காமல் இருப்பது :-
தலையில் தேவையான அளவு எண்ணெய் தேய்க்காமல் இருந்தால் நம் கூந்தலானது உடைய தொடங்கும் மற்றும் கூந்தலின் கருமை நிறமும் குறைந்து சீக்கிரமே கூந்தல் உதிர ஆரமித்து விடும்.
கதைகள் – 75 | தொடர்கதை – 2 | க்ரைம் – 572 + | கவிதை – 150 + | Written – 3000 +
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..