உங்கள் கூந்தல் உதிர்வை சரி செய்ய ஒரு ரகசியம் சொல்லுறன்..!!
ஆயில் மசாஜ் :-
எண்ணெய் கூந்தலின் போஷாகிற்கு மிகவும் முக்கியமான ஒன்று. கூந்தல் உதிர்வு மற்றும் கூந்தல் உடைதல் இருக்கும் பெண்கள், கூந்தலின் வேர் முதல் அடி நுனி வரை, எண்ணெயை நன்கு தேய்த்து மசாஜ் செய்து 45 நிமிடங்கள் வரை ஊற வைக்க வேண்டும். பின் ஹேரை சுடு தண்ணியில் வாஷ் செய்து கொள்ளவும். இதை வாரத்திற்கு இரண்டு முறை செய்யலாம். அப்படி செய்தால் தலையில் உள்ள வெப்பம் நீங்கி, கூந்தல் உதிர்வு , மற்றும் கூந்தல் உடைதல் கட்டுக்குள் வரும்.
ஹேர் மாஸ்க் :-
கூந்தல் உடைதலுக்கு மிக முக்கிய காரணம் தலையில் ஈரப்பதம் இல்லாமல் இருப்பது. ஹேர் மாஸ்க் பயன் படுத்துவதால் தலையில் ஈரப்பதத்தை தக்க வைத்து கொள்ள முடியும். எளிதாகவும், இயற்கையாகவும் வீட்டிலேயே முட்டையின் வெள்ளை கரு மற்றும் வாழைப் பழத்தை ஒன்றாக பிணைந்து முடியில் அப்ளை செய்ய வேண்டும். 20 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். பின் நன்கு கொதித்த நீரில் தலையை கசக்க வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் கூந்தல் உதிர்வு மற்றும் கூந்தல் உடைதலை தடுக்கலாம்.
அலோவேரா ஜெல் :-
சோற்று கற்றாழையை நன்கு அரைத்து தலையில் தேய்த்து 15 நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும். 15 நிமிடம் கழித்து தலையை அலச வேண்டும். இவ்வாறு செய்தால் முடி மென்மையாக இருக்க உதவும். அதுமட்டுமின்றி முடி உடைதல் மற்றும் முடி உதிர்வு தொல்லைகள் நீங்கும்.
ஹெல்த்தி புட் :-
முடி உதிர்வுக்காகவும், முடி வளர்ச்சிக்காகவும் நாம் சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும். பயிர் வகைகள், கீரைகள் ,கறிவேப்பிலை , காய்கறிகள் போன்ற உணவுகளை தவிர்க்காமல் எடுத்து கொள்ள வேண்டும் .
ஹேர் பேக் :-
நாம் ஈஸியாக வீட்டிலேயே ஹேர் பேக் செய்யலாம். வெந்தையம் மற்றும் கருப்பு பயிர் இந்த இரண்டினையும் நன்கு அரைத்து கொண்டு பின்பு அதனுடன் சிறிது தயிர் சேர்த்து பேஸ்ட் பதத்தில் எடுத்துக்கொள்ளவும் .பின் அதனை ஹேர் பேக்காக போட்டு நன்கு உலர்ந்த பின் ஹேர் வாஷ் செய்து கொள்ள வேண்டும். இப்படி செய்து வருவதால் முடி உதிர்வு குறைந்து முடியின் வளர்ச்சி அதிகரிக்கும்.