ஈரோட்டில் தொடங்க இருக்கும் மகளிர் உரிமைத்திட்டம் விண்ணப்ப பதிவேற்றம்..! எந்த நாளில் தெரியுமா..?
கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் பதிவேற்றம் செய்யும் முகாம் ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. இதுவரை மகளிர் உரிமைத்திட்டம் பதிவேற்றம் 1207 நியாய விலை கடைகளுக்கு உட்பட்ட குடும்ப அட்டை தாரர்களுக்கு 1130 இடங்களில் விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்யும் முகாம் இன்று நடைபெற உள்ளது.
இப்பணியில் மொத்தமாக 3777 அலுவலர்கள் பணியாற்றி உள்ளனர், இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜகோபால் சுங்காரா.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பம் மற்றும் டோக்கன் 20.07.2023 முதல் 23.07.2023 வரை நியாய விலை கடைகளில், அதில் இருக்கும் விற்பனையாளரால் வீடு வீடாக வழங்கப்பட உள்ளது, விண்ணப்பம் பெற பொதுமக்கள் நியாய விலை கடைக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை.
ஈரோடு மாவட்டத்தில் 1207 நியாய விலை அங்காடிகளும், 7,67,316 குடும்பங்களும் உள்ளது. 7,67,316 குடும்ப அட்டை தாரர்களுக்கும் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் பெருவதற்கான விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்யும் முகாம் கடந்த இரண்டு நாட்களுக்கு நடைபெற உள்ளது.
முதல் கட்டமாக 639 நியாய விலை கடைகளுக்கு உட்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு 586 இடங்களில் 24.07.2023 முதல் 04-08-2023 வரை விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்துக்கொள்ளலாம்.., முதல் நாள் முகாமில் இது நடைபெற உள்ளது.
இரண்டாவது கட்டமாக 568 நியாய விலை கடைகளுக்கு உட்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு 544 இடங்களில் 05.08.2023 முதல் 16.08.2023 வரை விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்துக்கொள்ள முடியும். இரண்டாம் நாள் முகாம் அன்று மற்ற அட்டை தரர்கள் விண்ணப்பித்துக் கொள்ள முடியும்.
ஈரோடு மாவட்டத்தில் இரண்டு கட்டங்களும் சேர்த்து 1207 நியாய விலை கடைகளுக்கு உட்பட்ட குடும்ப அட்டை தாரர்களுக்கு 1130 இடங்களில் விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்யும் முகாம் நடைபெற உள்ளது, இப்பணியில் மொத்தமாக 3777 அலுவலர்கள் பணியாற்ற உள்ளனர்.., இதனால் மக்கள் நெரிசலில் சிக்கிகொள்ளாமல் பொறுமையாக பதிவேற்றும் செய்துக்கொள்ளுங்கள் என ராஜகோபால் சுங்காரா கேட்டுக் கொண்டார்.