மகள் உயிருடன் வேண்டுமா..? பிணமாக வேண்டுமா..? மணிப்பூரில் நடந்த மற்றொரு பயங்கரம்..!!
மணிப்பூர் மாநிலத்தில் இரண்டு மாதங்களுக்கு மேலாக இனமோதல் பிரச்சனை தலை விரித்து ஆடுகிறது. அதிலும் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகள் நெஞ்சை உலுக்கும் சம்பவமாக இருக்கிறது. சில நாட்களாக மணிப்பூரில் ஒரு பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலம் கொண்டு வந்து, வீடியோ வெளியிட்ட சம்பவம், அனைவரின் மனதையும் உறைய வைத்தது.., அந்த பிரச்சனைக்கான தீர்வு வருவதற்குள் மற்றொரு சம்பவம் நடந்துள்ளது.
ஒரு பழங்குடியின பெண் தன் மகளின் இருப்பிடத்தை கண்டறிந்து போன் செய்துள்ளார், அப்பொழுது அவருக்கு கிடைத்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாய் போன் செய்த போது போனில் பேசிய மர்ம நபர், உன் மகள் இனி உனக்கு உயிருடன் வேண்டுமா அல்லது பிணமாக வேண்டுமா.., என்று கேட்டுள்ளார். இதை சொல்லிய சில நொடிகளிலேயே மகள் இறந்து விட்டால் என தகவல் வந்துள்ளது. அதிலும் மகளை அடித்து இரத்த வெள்ளத்தில் இருப்பதை போட்டோ எடுத்து தாயின் செல்லுக்கு அனுப்பியுள்ளனர். இதை கேட்டதும் கண்ணீர் மல்க மீண்டும் அந்த நபருக்கு தாய் போன் செய்து மகளின் உடலை தன்னிடம் ஒப்படைக்குமாறு கேட்டுள்ளார்.
ஆனால் அதற்கு பதில் அளிக்காததால் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மகளின் உடல் இன்று வரை தங்களிடம் ஒப்படைக்க வில்லை என கூறியிருக்கிறார், கொலை செய்யப்பட்ட மகளின் தந்தை மற்றும் தாய் கண்ணீர் மல்க அளிக்கப்பட்ட புகாரை காவல் துறையினரும் நிராகரித்துள்ளனர்.
பின் இதுகுறித்து செய்தியாக்களிடம் பேசிய தாய் மற்றும் தந்தை நடந்த சம்பவம் பற்றி கூறியிருக்கின்றனர். பின் அந்த தாயின் செல்லிற்கு மற்றொரு வீடியோ ஒன்று வந்துள்ளது. அதில் கார் ஷாப்பில் வேலை செய்துக் கொண்டிருந்த இரண்டு பெண்களை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்து அதை வீடியோவாக வெளியிட்டுள்ளனர்.
இந்த கொடூர சம்பவம் மே 5ம் தேதி நடந்துள்ளது, இந்த சம்பவம் நடந்த அதே நாளில் தான் மேலும் இரண்டு பெண்கள் நிர்வாணமாக இழுத்து செல்லப்பட்டனர். இது குறித்து பேசிய தாய் நான் ஒரு இதய நோயாளி என் மகளை பற்றி விசாரப்பதற்காக நான் போன் செய்தேன் மரு பக்கம் ஒரு பெண் தான் போன் எடுத்து பேசினார். அதில் பேசிய பெண் “உங்கள் மகள் உயிருடன் வரமாட்டள்., பிணமாக தான் வருவாள்” என கூறிய சில நொடியிலேயே இந்த அனைத்தம் நிகழ்ந்தது.
இது குறித்து போலீசில் புகார் செய்தோம்.., ஆனால் காவல் துறையினர் இதுவரை ஒருவரை கூட கைது செய்யவில்லை.., மே மாதத்தில் இருந்து தொடங்கிய கலவரத்தில் இதுவரை 125 பேர் கொலை செய்யப்பட்டு இருக்கின்றனர். 40,000 பேர் குடியிருப்பை காலி செய்து இருக்கின்றனர்.
ஆனால் இதுபற்றி மணிப்பூர் அரசு எந்த விதமான நடவடிக்கையம் எடுக்காமல் இருக்கிறது.., ஒரு பெற்றோருக்கு தான் தெரியும்.., பெற்ற பிள்ளையை கண்முன்னே பிணமாக பார்ப்பது எவ்வளவு கொடுமை என்று.., வேதனை தெரிவித்துள்ளனர்.
இனிமேலாவது இந்த கொடூர சம்பவங்கள் நடக்கலாம் இருக்க மணிப்பூர் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் வைத்துள்ளனர்.
Discussion about this post