குழந்தை பிறந்தபின் வரும் தொப்பை கரைய ஒரு ரகசியம்..!!
குழந்தை பிறந்த பல பெண்களுக்கு தொப்பை கூடிவிடும் முக்கியமாக சிஸேரியன் மூலம் குழந்தை பெற்ற பெண்கள், உடல் எடை மற்றும் தொப்பையை குறைப்பது சவால் நிறைந்த ஒன்று என பலரும் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.
ஆரோக்கியமான உடலை மீண்டும் பெற சில டிப்ஸ்கள் பற்றி பார்க்கலாம்.
* பிரசவத்திற்கு பின் தினமும் காலை உடற்பயிற்சி அல்லது யோகா செய்யலாம். இது உடலுக்கு மட்டுமின்றி மனதிற்கும் ஆரோக்கியம் கொடுக்கும்.
* உடற்பயிற்சி செய்யும் பொழுது மிக கவனம் தேவை, ஒரு சிலருக்கு உடற் பயிற்ச்சி செய்யும் பொழுது ரத்தப்போக்கு ஏற்படும். இது அவரவரின் உடல் மாற்றம் பொறுத்தது. எனவே உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசித்து உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
* பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்கலாம்.., முக்கியமாக இனிப்பு பலகாரங்கள் ரத்த சர்க்கரை அளவை அதிகரிப்பதால், உடல் எடையை அதிகரிக்கச் செய்து விடும். பதப்படுத்தப்பட்ட சிக்கன், மட்டனில் அதிக கொழுப்பு பொருட்கள் நிறைந்து இருக்கும், எனவே இவை வேகமாக உடல் எடையை அதிகரிக்கச் செய்துவிடும்.
* குழந்தைக்கு கொடுக்கப்படும் தாய்ப்பால் குழந்தைக்கு ஆரோக்கியம் கொடுக்கும். உங்களின் உடலில்
உள்ள கொழுப்புகளை கரைத்துவிடும்.
* தினமும் காலை மூச்சு பயிற்சி செய்யலாம். அதாவது மூச்சை மேலும் கீழுமாக இழுத்து விட்டு மூச்சு பயிற்சி செய்யலாம், இது உடல் எடையை குறைப்பது மட்டுமின்றி நாள் முழுவதும் உடலை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள உதவும்.
* பிரசவம் முடிந்து சில நாட்கள் கழித்து ஓமம் தண்ணீர் குடிக்க தொடங்கலாம், இது உடலில் உள்ள கொழுப்பை கரைத்துவிடும். மேலும் உடலை என்றும் நீரேற்றத்துடன் வைத்திருக்கும்.
* பிரசவத்திற்கு பின் ஒரு சிலர் தொப்பையை குறைப்பதற்காக, மகப்பேறு பெல்ட் அணிவார்கள், அது வயிறை இழுத்து பிடித்து, கர்ப்பப்பையை சுருங்க செய்யும். எனவே மருத்துவர் பரிந்துரை இல்லாமல் இதை முயற்சி செய்ய வேண்டாம்.
மேலும் இதுபோன்ற பல பெண்கள் குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..