மாதவிடாய் வலியை குறைக்க இதை ட்ரை பண்ணுங்க..!!
பெண்களுக்கு மாதவிடாய் காலம் என்பது சிறைக்காலம் போல், மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் வலி என்னவென்று பெண்களுக்கு மட்டும் தான் தெரியும். ஆனால் அந்த வலியை சமாளிக்க சில ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொண்டாலே போதும்.
இஞ்சி டீ :
ஒரு பாத்திரத்தில் 2கப் தண்ணீர் ஊற்றி, அதில் இடித்த இஞ்சி மற்றும் மிளகு சிறிதளவு சேர்த்து நன்கு கொதிக்கவிட வேண்டும்.
பின் அதில் புதினா சேர்த்து 1கப் தண்ணீர் வரும் வரை கொதிக்கவிட வேண்டும். சிறிதளவு எலும்பிச்சை சாறு, நாட்டு சர்க்கரை மற்றும் பணங்கற்கண்டு சேர்த்து குடித்து வந்தால் வலி குறைந்து விடும். உடலும் ஆரோக்கியம் பெரும்.
செலரி ஜூஸ் :
செலரி என்பது பார்ப்பதற்கு கொத்தமல்லி வடிவில் இருக்கும். உணவுடன் சேர்த்து இதை சாப்பிடுவதால் வலியை குறிப்பது மட்டுமின்றி அதிக ரத்தப்போக்கு ஆகமலும் பார்த்துக்கொள்ளும்.
மேலும் வைட்டமின் ஏ, வைட்டமின் டி, வைட்டமின் ஈ, வைட்டமின் கே, மற்றும் வைட்டமின் பி சத்து அதிகம் இருப்பதால் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது.
பப்பாளி ஜூஸ் :
பப்பாளியில் இருக்கும் வைட்டமின்கள் மற்றும் ஆன்டி ஆக்சிடென்ட்கள், மினரல்ஸ்கள் மாதவிடாய் வலியை குறைக்க உதவும்.
நன்கு பழுத்த பப்பாளியை மிக்ஸியில் போட்டு அரைத்து, எலும்பிச்சை சாறு, நாட்டுச்சர்க்கரை மற்றும் ஏலக்காய் பொடி ஒரு பின்ச் சேர்த்து குடித்தால், வலியும் குறையும். தசையும் வலுவு பெரும்.
கேரட் ஜூஸ் :
மாதவிடய் சமயத்தில் இரும்புச்சத்து குறைபாடு ஏற்படும். இதனால் ஒரு சில பெண்களுக்கு ரத்தசோகை உண்டாக்கும். இதில் இருக்கும் இரும்புச்சத்து இழந்த ரத்தத்தை மீட்டெடுக்க உதவும்.
அன்னாசி ஜூஸ் :
அன்னாசியில் இருக்கும் வைட்டமின் பி, சி மற்றும் மெக்னிசியம் சத்துக்கள் வயிற்றுக்கு புத்துணர்ச்சி கொடுத்து, வயிற்று பிடிப்பை குறைக்க உதவும்.
பீட்ரூட் ஜூஸ் :
பீட்ரூட்டில் இருக்கும் பீட்டா கரோட்டின் மற்றும் ஆன்டி ஆக்சிடென்ட் மற்றும் இதர வைட்டமின்கள் உடலுக்கு பல நன்மைகள் தரும். உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதுடன், தசைபிடிப்பை குறைக்க உதவுகிறது.
மேலும் இதுபோன்ற பல பெண்கள் குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..
Discussion about this post