ஒரு நொடி வாழ்க்கை தி க்ரைம் – பகுதி – 3
இதுவரை நடந்தது.. இதுவரைக்கு கிட்னாப் கும்பலால் 5 பேர் கடத்தப்பட்டு இருக்காங்க ஆனா அவங்கள பத்தின எந்த ஒரு தகவலும் கிடைக்காததுனால.., இன்ஸ்பெக்டர் அபி., கடத்தப்பட்டவங்கள பத்தின தகவலை சேகரிக்குறாங்க. அப்படி ஒருத்தர தேடி போன அப்போ தான்.., சில அதிர்ச்சி தகவல் கிடைக்குது.
இனி….
இதுவரைக்கு கடத்தப்பட்டவங்க போன் காண்டெக்ட் (Contact’s) details. எல்லாமே delete ஆகி இருந்துச்சு அதே சமயம்.. கடத்தப்பட்டவங்களும் சுத்தமா சுய நினைவே இல்லாம இருக்காங்க.
அதுனால.. அவங்க நெருங்கிய நண்பர்கள்.. அவங்க கடைசியா போன இடம் எல்லாமே விசாரிக்குறாங்க. அப்போ தான் இந்த கடத்தப்பட்ட ஆள பத்தி தெரியவருது. அவன் பேரு “தயாளன்” பெரிய business man. ஒரு முறை ஆபிஸ் PA கூட நெருக்கமா இருந்த வீடியோவ இன்ஸ்பெக்டர் அபி பாக்குறாங்க.
ஒரு பொண்ணுங்க கூட இல்லாம நிறைய பொண்ணுங்க கூட இது மாதிரி அந்த தயாளன் இருந்து இருக்காரு. பணக்காரன் என்றதால் பணம் கேட்டு மிரட்டி இருக்க வாய்ப்பு.. இல்லை.. அதே சமயம் எந்த பொண்ணும் கம்ப்ளைண்ட் கொடுக்கல.. அப்போ இதை பாதிக்கப்பட்ட பொண்ணு யாராச்சும் பண்ணி இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அடுத்த விசாரணையை தொடங்குறாங்க அபி.
ஆனா.. விசாரணையை தொடங்குறதுக்கு முன்னாடி தயாளன் வீட்டு உறவினர்கள் இந்த கேஸ் எடுக்க வேண்டாம் சொல்லி நிறுத்துறாங்க. அதே மாதிரி காணாம போன பையன பத்தி விசாரிக்குறாங்க.. ஆனா அந்த பையன் பேரு தீபன்.. 19 வயசு பையன் காலேஜ்ல படிக்குறான்..
காலேஜ்ல போய் விசாரிச்சா.. அந்த பையன் படிக்காம சுத்திட்டு., இருக்குறதா நிறைய பிளாக் மார்க் வந்து இருக்கு. அப்புறம் அவன் Friends கிட்ட விசாரிச்ச அப்போ. அவனுக்கு ஒரு Girl Friend இருக்குறதா சொல்லுறாங்க..
சரினு அந்த பொண்ணுகிட்ட விசாரிக்க போறாங்க.. அப்போ அந்த பொண்ணு சொன்ன தகவல் கேட்டு இன்னும் அதிர்ச்சி ஆகுறாங்க.
SI ரவி : இங்க பாரு பா, நான் உன்னை ஸ்டேஷன்க்கு எல்லாம் கூட்டிட்டு போயி விசாரிக்க மாட்டன்.., என்ன நம்பி சொல்லுபா என்ன நடந்தது. அவன் எப்படி காணாம போனான்.
கீர்த்தி : Deepan Girl Friend, அவனா எனக்கு சுத்தமா பிடிக்காது மேம், என் கனவு எல்லாம் நல்லா படிச்சு.., ஒரு வேலைக்கு போயி அப்பா அம்மாவை பாத்துக்கணும் மேம்.
SI ரவி: அப்பா அம்மா என்ன பண்றாங்க மா,
கீர்த்தி : அப்பா வாட்ச் மேன், அம்மா வீட்டு வேலை செய்யுறாங்க., தங்கச்சி ஸ்கூல் படிக்கிறா மேம். அவனை பிடிக்கலனு நான் பலமுறை சொல்லிட்டேன் ஆனா.., அவன் கேட்கல. ஒரு முறை நான் Librery ல இருக்குற அப்போ என் கிட்ட தப்பா நடந்துக்கு முயற்சி பண்ணான் மேம்.
SI ரவி: தப்பா எதுவும் நடக்கலலை.. பா
கீர்த்தி : அய்யா இல்லை மேம்.. நான் அவனை தள்ளி விட்டுட்டு போயிட்டன்.. ஆனா அவன் என்னைக்கு இருந்தாலும் என்னை..
SI ரவி : ம்ம்.. எதுவும் சொல்ல வேண்டாம் புரியுது.. ஆனா ஏன் எல்லாம் உன்னை அவனோட Girl Friend சொல்லுறாங்க..
கீர்த்தி : அப்படி தான் மேம் எல்லார்கிட்டையும் சொல்லி வச்சி இருக்கான்.. அவன் அப்பா பெரிய ஆளு அதனால அவன எதிர்த்து எங்களால எதுவும் பேச முடியல மேம்..
SI ரவி : சரி ஓகே பா.. நீ போ நான் பாத்துக்குறேன்..
கீர்த்தி : ஆனா அன்னைக்கு அவன் என்னை தொரத்திட்டு வர அப்போ.., ஸ்டெப்ஸ் இறங்குற அப்போ அவன் சத்தம் கேட்கல மேம்.
நானும் அவனுக்கு பயந்து வேகமா.. கிளம்பிட்டேன்..
SI ரவி : கடைசியா எங்க பா.. அவன் சத்தம் கேட்கல..?
கீர்த்தி : 2nd Floor மேம்..
கீர்த்தியின் பேச்சை கேட்டுட்டு அபி போயி தேடுறாங்க.. அப்போ தான் எந்த ஒரு கேஸ்லையும் கிடைக்காத ஒரு லீடு கிடைக்குது..
அந்த லீடு என்னனு அடுத்த கதையில படிக்கலாம்..
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..