புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று குறித்து மக்கள் அச்சம் வேண்டாம்..
புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று கேரளா மற்றும் தமிழ்நாட்டில் பரவி வருகிறது. கேரளாவில் 230 பேர் இது வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், புதிய வகை கொரோனாவால் பெரிய அளிவில் பாதிப்பு இல்லை என்பதால் பொதுமக்கள் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை என கூறினார்.
காய்ச்சல் உள்ள இடங்களில் ஆர்டிபிசிஆர் சோதனை அதிகப்படுத்த முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளதாக குறிப்பிட்ட அவர், தற்போது உள்ள கொரோனா குறித்து பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அதற்கான முடிவுகள் ஒரு வாரத்தில் தெரிவிக்கப்படும் என கூறினார்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.