செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஜனவரி 4-ஆம் தேதி வரை நீட்டிப்பு…
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஜனவரி 4-ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஜூன் மாதம் 14- ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தனர்.
இதையடுத்து உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செந்தில் பாலாஜி புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலமாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.
இதையடுத்து , அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 13-வது முறையாக, வரும் ஜனவரி 4-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி எஸ்.அல்லி , உத்தரவிட்டுள்ளார்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.