ஆறு மாதத்திற்கு ஒரு முறை நிகழும் அதிசயம்..!! இந்த கோவிலுக்கு செல்ல மறக்காதீங்க..!!
உலகத்தில் உள்ள ஒவ்வொரு கோவில்களுக்கும் ஒரு சிறப்பு கதை உண்டு அதே சமயம் ஒவ்வொரு கோவில்களும் தோன்றிய வரலாறு இருக்கும் அப்படியாக இந்த திருத்தளத்திற்கு சிறப்பு வரலாறு மட்டுமின்றி அதில் எழுந்தருளியுள்ள விநாயகருக்கும் சிறப்பு உண்டு.. இந்த திருதலத்தில் பிள்ளையார் 6 மாதத்திற்கு ஒருமுறை நிறம் மாறும் அதிசயம் நிகழ்கிறது…
அப்படி பல்வேறு அதிசயங்களை நிகழ்த்தும் இந்த விநாயகர் பற்றியும்.., திருத்தலத்தின் சிறப்பு பற்றியும் பார்க்கலாம்..
அதிசய கோவில் :
நாகர்கோவில் மாவட்டம் கேரளபுரம் என்ற இடத்தில் உள்ளது.., விநாயகரை வழிபட்டால் தடைகள் நீங்கி விடும் என சொல்லுவார்கள்.. தடைகள் நீக்கி அருள் பாலிப்பதால் தான் எந்த ஒரு தொழில் தொடங்கினாலும் விநாயகரை வழிபாடு செய்து விட்டு அந்த தொழிலை தொடங்குகிறோம்…
அப்படியாக இந்த அதிசய கோயிலின் விநாயகர் நம்முடைய வாழ்க்கையின் எல்லா பிரச்சனைகள் மற்றும் சிக்கல்களை தகர்த்து வாழ்க்கையில் பல அதிசயங்களை நடக்க செய்கிறார்.
12ம் நூற்றாண்டில் இக்கோவில் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது… இங்குள்ள எழுந்தருளியுள்ள விநாயகர் 2300 ஆண்டுகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.. இந்த சிலையை ஆகம விதிப்படி அதாவது எந்த திசையில் தெய்வம் இருக்க வேண்டும் என பார்த்து வைக்கப்படவில்லை என சொல்லப்படுகிறது..
இக்கோவிலின் அதிசயமும் சிறப்பும் என்னவென்றால் இங்குள்ள விநாயகரின் சிலை ஆறு மாதத்திற்கு ஒருமுறை நிறம் மாறும் என சொல்லப்படுகிறது..
உத்தராயண காலம் :
உத்தராயண காலம் என்று சொல்லப்படும் (மார்ச் மாதம் முதல் ஜூன் வரை) கருப்பான தோற்றத்தில் விநாயகர் காட்சி அளிக்கிறார்..
தட்சிணாயண காலம் :
தட்சிணாயண காலம் என்று அழைக்கப்படும்
(ஜூலை மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை) வெள்ளை நிறத்தில் மாறி விநாயகர் காட்சி அளிப்பதாக சொல்லப்படுகிறது.. ஆறு மாதத்திற்கு விநாயகர் தானாக நிறம் மாறி காட்சி அளிப்பதால் தான் இவர் அதிசய விநாயகர் என அழைக்கிறார்கள்..
இக்கோவிலின் மற்றொரு அதிசயமாக இக்கோவிலில் உள்ள கிணற்றின் நீரானது ஆறு மாதத்திற்கு ஒருமுறை நிறம் மாறி காட்சி அளிக்கிறது..
விநாயகர் வெள்ளை நிறத்தில் காட்சி கொடுக்கும் போது கிணறு நீர் கருப்பு நிறத்திலும்., விநாயகர் கருப்பு நிறத்தில் காட்சி கொடுக்கும் போது கிணறு நீர் வெள்ளை நிறத்திலும் மாறிவிடுமாம்.. இந்த அதிசயம் இந்த கோவிலில் மட்டும் நிகழ்வதாக சில புராண கதைகள் சொல்லுகிறது..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..