அப்பளத்தை வைத்து மேஜிக் செய்த மனிதன்..!! அடேங்கப்பா இது சூப்பரா இருக்கே..!!
குழந்தைகள் முதல் பெரியவர்கள் பலரும் இன்று ஆண்ட்ராய்டு உலகத்தில் வாழ்ந்து வருகின்றனர்.. ஒரு சிலர் நமது பண்டைய முறைகளை மறந்து தற்போதைய டிஜிட்டல் உலகில் வாழ்ந்து வருகின்றனர்.. இப்படி இருக்க ஓவியர் சபரிநாதன் அப்பளத்தில் பண்டையக்கால ஓவியங்களை வைத்து அசத்தி வருகிறார்..
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை பகுதியை சேர்ந்த சபரிநாதன் என்ற ஓவியர் அவர் வசிக்கும் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணி புரிந்து வருகிறார்.. சிறுவயதில் இருந்து ஓவியத்தின் மீது கொண்ட ஆர்வத்தால் எப்போதும் ஓவியங்களை வரைந்து கொண்டு இருப்பாராம்..
தமிழர்களின் பண்டையகால வாழ்வியல் முறைகள் பலரும் மறந்து வரும் நிலையில் அதை அவர்களுக்கு நினைவூட்டும் விதமாக இந்த ஓவியங்கள் அமைந்துள்ளது.. இதுகுறித்து நமது மதிமுகம் ஓவியர் சபரிநாதன் அவர்களை தொடர்பு கொண்டு பேசியபோது..
பண்டைய காலத்தில் ஏறுதழுவதல், கல்லை தூக்குவது, காளையை அடக்குவது, கும்மி பாட்டு போன்றவற்றை நம் கண்முன்னே பார்த்து இருப்போம்.. ஆனால் தற்போதைய காலக்கட்டத்தில் பலரும் அதை பார்த்திடாத ஒன்றாக மாறிவிட்டது.. கிராமபுறங்களில் தமிழர்களின் விழாக்கள் கொண்டாடப்பட்டாலும் தற்போது நகர புறங்களில் அதை பலரும் ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்..
நம்முடைய பாரம்பரிய வழிபாடுகள் எல்லோரும் தெரிந்துக்கொள்ள வேண்டும்.. தற்பொழுது வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்ப வளர்ச்சி காலத்தில் அனைவரும் செல்போன் உள்ளிட்ட தொழில்நுட்ப வளர்ச்சியின் மூலம் பண்டைய கால தமிழர்களின் வாழ்வு ஏழு முறைகளை தற்போதைய சந்தேகத்தினர் அறிவது என்பது அரிதான ஒன்றாக இருக்கிறது.
இந்நிலையில் அப்பளத்தில் ஓவியங்கள் வரைந்தால் அதை பலரும் மனதில் வைத்துக்கொள்ள முடியும்.. ஓவியங்களை பேப்பரிலோ அல்லது சுவரிலோ, போர்டில் வரைந்தால் அதை எல்லோரும் பார்த்துவிட்டு அதை சில மணி நேரத்திலேயே மறந்துவிடுவார்கள் அதுவே அப்பளத்தில் வரைந்தால் அதை யாராலும் மறக்க முடியாது..
இப்போ இருக்கும் ஜெனரேஷன் எந்த ஒரு விஷயத்தையும் அதை போட்டோவாக எடுத்து ஸ்டேட்டஸ் வைப்பது சமூக வலைத்தளங்களில் பதிவிடுவது வழக்கம்.. இதுபோன்ற ஓவியங்களை அவர்கள் பார்க்கும் போது அது புதிதாக இருக்கும்..
அப்பளத்தில் ஓவியமா என்று அவர்கள் ஆச்சரியமாகவும் அவர்கள் பார்ப்பார்கள் எனவே.. தான் இதுபோன்ற சிந்தனையில் நான் அப்பளத்தில் ஓவியத்தை வரைய தொடங்கினேன் என அவர் கூறினார்…
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..