நரைமுடி பிரச்சனையை சரி செய்ய ஒரு மேஜிக்..!!
நரைமுடி பிரச்சனை இளம் வயதிலேயே ஆரம்பித்துவிடுகிறது. இதை மறைப்பதற்கு கெமிக்கல் ஹேர் டை பயன்படுத்துவது, அதனால் புற்றுநோய் ஆபத்து வரும் நிறைய ஆபத்துக்களையும் ஏற்படுத்துகிறது.
சரி..! அப்போ நரை முடி வராமல் தடுப்பது எப்படி என்ற கேள்வி எல்லோருக்கும் இருக்கும். அதற்கு தலைமுடி பராமரிப்பில் சில மாற்றங்கள், நம்முடைய உணவுமுறை, வாழ்க்கை முறை பழக்க வழக்கங்களில் சில மாறுதல்கள் செய்வதன் மூலம் இளம் வயதிலேயே நரைமுடி வருவதை நம்மால் தவிர்க்க முடியும்.
இளம் வயதிலேயே நரைமுடி உண்டாவதற்கு ஹார்மோன் மாற்றங்கள், தலைமுடிக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் பற்றாக்குறை, அதிக ரசாயனங்கள் கலந்த பொருள்களை பயன்படுத்துதல் உள்ளிட்ட பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.
அவற்றை சரிசெய்தாலே ஓரளவிற்கு நரைமுடி இளம் வயதில் வராமல் தடுக்க முடியும். அவற்றை தவிர கீழ்கண்ட சில வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் நரைமுடி வராமல் தடுக்க முடியும்.
நரைமுடி கொறஞ்சு இயற்கையாவே கருப்பாக மாறணுமா? உங்களுக்கு தான் இந்த 7 டிப்ஸ்…
தலைமுடிக்கு மருதாணி மிகச்சிறந்த ஊட்டச்சத்து. மருதாணி அப்ளை செய்வது வெள்ளை முடியை மாற்றி பிரவுன் நிறத்தில் மாற்றும். அடிக்கடி இதை தலைக்கு அப்ளை செய்யும்போது வேகமாகவே நரைமுடி மாறத் தொடங்கும்.
வாரத்திற்கு ஒரு முறை தலைமுடிக்கு மருதாணி அப்ளை செய்து வரும் போது நரை முடி மறைந்து கருமையாவதோடு அடுத்தடுத்து புதிய நரைமுடி தோன்றுவதை தள்ளிப் போடும். முடியும் ஆரோக்கியமாக வளர ஆரம்பிக்கும்.
ஹேர் ஆயில் தலைமுடிக்கு நிறைய அப்ளை செய்வதோ நீண்ட நேரம் வைத்திருப்பதோ நல்லதல்ல, நல்லது தான் என்று இரு வேறு கருத்துக்கள் நிலவுகின்றன.
ஆனால் ஆயுர்வேதத்தில் தலைமுடிக்கு ஆயில் அப்ளை செய்வது முடிக்குத் தேவையான ஊட்டத்தைக் கொடுப்பதோடு முடியை வறட்சி அடையச் செய்யாமல் ஹைட்ரேட்டாக வைத்திருக்கச் செய்யும் என்பதில் மாற்று கருத்தில்லை.
அதிலும் மூலிகைகள் சேர்க்கப்பட்ட ஹெர்பல் ஹேர் ஆயில் பயன்படுத்துவது இன்னும் சிறந்தது. இது முடியை ஆரோக்கியமாக வைத்திருப்பதோடு வளர்ச்சியையும் தூண்டும். விரைவாக நரைமுடி வருவதை குறிப்பாக இளநரை பிரச்சினையைத் தடுக்கும்.
3. டார்க் சாக்லெட் சாப்பிடுங்கள் :
சர்க்கரை சேர்க்காத டார்க் சாக்லெட் சாப்பிடுங்கள். இது கேட்க கொஞ்சம் விநோதமாகத் தோன்றலாம். ஆனால் டார்க் சாக்லெட் சாப்பிடுவதன் மூலம் அதிலுள்ள காப்பர் உடம்பில் மெலனின் உற்பத்தியைத் தூண்டும்.
இதனால் இளம் வயதிலேயே நரைமுடி தோன்றுவதைத் தடுத்து முடியை கருமையாக வைத்துக் கொள்ள முடியும்.
4. வைட்டமின் பி12 அதிகமுள்ள உணவுகள் :
பி12 வைட்டமின்கள் தலைமுடிக்கு மிக அவசியமான ஒன்று. இது சரியான அளவில் இல்லாத போது அதிகமாக முடி உதிர்வது, இளம் வயதிலேயே நரைமுடி பிரச்சினை ஆகியவை உண்டாகும்.
அதனால் உங்களுடைய தினசரி டயட்டில் அவகேடோ, காய்கறிகள், ஃபிரஷ்ஷான பழங்கள், ஜூஸ், ஆரஞ்சு பழங்கள், ப்ளம்ஸ், ஈஸ்ட்,கிரான் பெர்ரி உள்ளிட்ட வைட்டமின் பி12 நிறைந்த உணவுகளை சேர்த்துக் கொள்ளுங்கள்.
-நிரோஷா மணிகண்டன்
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..