ஞாயிற்றுக்கிழமை இறைவன் வழிபாடு..!!
ஞாயிற்றுக்கிழமை காலை சூரிய உதயம் தொடங்கியதும் தியானம் செய்ய வேண்டும்.., ஞாயிறு என்பது சூரியனை குறிக்கும், இந்த தியானம் அவரை வணங்குவதற்கு சமம், தியானம் செய்து முடித்தவுடன் பூஜை அறைக்கு சென்று விளக்கு ஏற்றி தீப ஆராதனை செய்ய வேண்டும்.
சூரியன் உலக இயக்கத்திற்கு மிக முக்கியமான ஒன்றாக இருக்கிறது. சிறப்புமிக்க சூரியனை நம்மவர்கள் வழிபாடு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். சூரியனை வழிபடும் சமயத்திற்கு சவுமாரம் என்று பொருள். சூரியன், சிவபெருமானின் வலது கண்ணாக இருப்பதாக புராணங்கள் கூறுகின்றன.
சூரியனை சிவனோடு ஒப்பிட்டு சிவ சூரியன் என்றும், விஷ்ணுவோடு ஒப்பிட்டு சூரிய நாராயணர் என்றும் அழைப்பார்கள். சிவபெருமானைநோக்கி கடுமையான தவம் இருந்த சூரியன், ‘கிரகபதம்’ என்னும் பேறும் ஆயிரம் கிரகணங்களோடு ஒளி மண்டலத்தில் உலா வரும் உயர்வையும் பெற்றான்.
தீப ஆராதனை செய்து முடித்ததும்.., ஜீவ ராசிகளுக்கு உணவு தானம் செய்ய வேண்டும். உணவு தானம் கொடுத்தால் என்றும் மன நிறைவுடன் இருக்கும்.
இந்த வழிபாட்டை செய்வதால் மனமும், உடம்பும், என்று திடமாக இருக்கும்.
மேலும் இதுபோன்ற பல ஆன்மீக தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்.