பிரதமர் மோடி சர்வாதிகாரி ஆகிவிட்டார் மதிமுக பொது செயலாளர் வைகோ குற்றச்சாட்டு..!!
கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட மதிமுக பொது செயலாளர் வைகோ இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றிய பிரதமர் மோடி சர்வாதிகாரி ஆகிவிட்டார் வைகோ பேச்சு
சென்னை ஓட்டேரியில் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்குழு கூட்டம் திராவிட முன்னேற்றக் கழக சென்னை கிழக்கு மாவட்டம் திரு வி க நகர் தெற்கு பகுதி கழகம் சார்பாக பகுதி செயலாளர் சாமிக்கண்ணு தலைமையில் நடைபெற்றது
இந்த பொதுக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டார் மேலும் கூட்டத்தில் அமைச்சர் சேகர்பாபு, திராவிடர் இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப. வீரபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்
பொதுக் கூட்டத்தில் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சனாதனத்தை தொடர்ந்து நாம் எதிர்க்க வேண்டும் சனாதனத்தை அண்ணா தொடர்ந்து எதிர்த்து வந்திருக்கிறார் என்று கூறியவர் சனாதனம் குறித்து அண்ணா பேசிய உரைகளை மேற்கோள் காட்டி பேசினார்…
தொடர்ந்து பேசியவர் பிரதமர் மோடி இந்தியாவின் பெயரை ஒரே நிமிடத்தில் “பாரத்” என மாற்றிவிட்டார்..
இந்தியா என்பது ஒரே நாடு அல்ல இந்தியா என்பது பல்வேறு இனங்களின் கூட்டமைப்பு முதலில் நாங்கள் இந்தியா என்ற நாட்டையே ஏற்காமல் திராவிட நாடு கேட்டவர்கள் ஆனால் தற்போது இந்தியா என்ற பெயரையும் பிரதமர் மோடி மாற்றி இருக்கிறார்
இந்தியாவை “பாரத்” என மாற்றிவிட்ட பிரதமர் மோடி சர்வாதிகாரி ஆகிவிட்டார் என கூறியவர். இந்தியா என்ற அமைப்பையே பிரதமர் சுக்கு நூறாக்கிவிட்டார் என தெரிவித்தார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..