சருமம் என்றும் அழகாக இருக்க இதை ட்ரை பண்ணுங்க.!!
சருமத்தில் பெரிய துளைகள் உருவாவதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. நீர்ச்சத்து குறைபாடு தொடங்கி அதிக ரசாயனப் பயன்பாடு, ஹார்மோன் சமநிலையின்மை, மன அழுத்தம், பதட்டம், ஊட்டச்சத்து குறைபாடு, பாக்டீரியா தொற்றுக்களால் ஏற்படும் பாதிப்பு, கரும்புள்ளிகள், அதிகப்படியான சீபம் சுரப்பு என ஏராளமான காரணங்கள் இருக்கின்றன.
இவற்றை சரிசெய்தாலே ஓரளவு சருமம் ஆரோக்கியமாக இருக்கும். முகத்தில் பெரிய பெரிய துளைகள் இருப்பதில் நாளடைவில் குழி போன்று மாறிவிடும். இந்த பெரிய துளைகள் முகத்தின் அழகையே கெடுத்துவிடும். அந்த பெரிய துளைகளோடு மேக்கப் போடும் போது பயன்படுத்தும் கன்சீலர், ஃபவுண்டேஷன் ஆகியவையும் துளைகளுக்குள் தங்கி விடும்.
இந்த பெரிய துளைகளைச் சரிசெய்ய வீட்டில் உள்ள பொருள்களை பயன்படுத்துவதன் மூலம் இயற்கையாகவே சருமத்தின் பெரிய துளைகளின் அளவைக் குறைக்க முடியும்.
ஒரே இரவில் பெரிய சரும துளைகள் மறையணுமா…? இதில் உங்கள் சருமத்திற்கு ஏற்ற ஏதாவது ஒன்று பயன்படுத்தி பாருங்கள் .
கடலை மாவு – 1 ஸ்பூன்,
மஞ்சள் – கால் ஸ்பூன்,
தயிர் – 2 ஸ்பூன்,
ஆலிவ் ஆயில் – 1 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை :
ஒரு பௌலில் கடலை மாவுடன் மஞ்சள், ஆலிவ் ஆயில், தயிர் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு ஸ்மூத் பேஸ்ட்டாகக் கலந்து கொள்ளுங்கள்.
இந்த பேஸ்ட்டை முகத்தை கழுவி விட்டு அப்ளை செய்து 20 நிமிடங்கள் வரை அப்படியே விட்டுவிடுங்கள்.
பிறகு லேசாக முகத்தை மசாஜ் செய்துவிட்டு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவிக் கொள்ளுங்கள்.
கடலை மாவு சருமத் துளைகளுக்குள் இருக்கும் மாசுக்களை முற்றிலும் உறிஞ்சி வெளித்தள்ளும். மஞ்சளில் உள்ள ஆன்டி பாக்டீரியல் பண்புகள் சருமத்தில் ஏற்படும் பாக்டிரியா தொற்றைச் சரிசெய்யும். ஆலிவ் ஆயில் சருமத்தை துளைகள் இன்றி மென்மையாக வைத்திருக்க உதவி செய்யும்.
மேலும் இதுபோன்ற பல அழகு குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திங்கள்
Discussion about this post