ADVERTISEMENT
சட்டவிரோதமாக ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்த இரண்டு இளைஞர்கள் கைது…
தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் சட்டவிரோதமாக ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்த இரண்டு இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் ஒரு சில இளைஞர்கள் சட்டவிரோதமாக ஆயுதங்களை பதுக்கி வைத்திருப்பதாகவும்,
வன்முறையை தூண்டும் வகையில் பொது இடங்களில் பேசி வருவதாகவும் உளவுத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அதன் அடிப்படையில் வருவாய்த் துறையினரின் உதவியோடு ஏராளமான காவல்துறையினர் நான்கு வீடுகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையில் வடக்குத் தெருவைச் சேர்ந்த ரசூல் மைதீன் மற்றும் தர்வேஷ் மைதீன், என்ற இருவரின் வீட்டிலும் இரு பக்க முனை கொண்ட பட்டாகத்தி, மற்றும் பழங்கால வாள் போன்ற ஆறு தடை செய்யப்பட்ட ஆயுதங்களை பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்துள்ளது.
ஆயுதங்களை பறிமுதல் செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு அவர்கள் இருவரையும் கைது செய்து உத்தமபாளையம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
